xxxx

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவம் கடந்த 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகியது.  (படங்கள்)

Read more…

மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம்: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல்!

மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று கிழக்கு உக்ரைனில் போராடும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இத்தாலிய நாளேடான “Corriere Della Sera” வுக்கு பெயரை வெளியிட விரும்பாத கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:  (எம்.ஹெச்.17: துண்டு, துண்டாக உள்ள உடல்களை அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?)

15 வயதுச் சிறுமி நயினாதீவுக்குச் சென்றாா் – காதல் உருவாகியது – கற்பை இழந்தாா்

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Read more…

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!

“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.  ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.  (சிறப்பு கட்டுரை)

Read more…

இணுவிலில் தம்மைக் காதலிக்குமாறு யுவதி ஒருவரைத் தொல்லைப்படுத்தியவா்கள் கைது

யாழ்., இணுவில்,  மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்டஅதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க.வில் ‘அம்மாவின் ஆசை’ ‘அமாவாசை’க்கு அருகே வருவதால் அமைச்சர்கள் கிடுகிடு!

தமிழக சட்டசபைக் கூட்டம் முடிந்த பின் அதிமுகவில் பெரிய அளவில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று தகவல் உள்ளது. அமைச்சரவை மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் நியமனம் என பல்வேறு மாற்றங்களைச் செய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Read more…

7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளியை அடித்தே கொன்ற கிராம மக்கள். மேற்குவங்கத்தில் பரபரப்பு.

மேற்கு வங்காளத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலையும் செய்த மூன்று குற்றவாளிகளை கிராமத்தினர் நிர்வாணமாக கட்டி வைத்து கடுமையாக தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததாகவும், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான  நிலையில்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும்  திடுக்கிடும்  தகவல் ஒன்று கூறுகிறது.

Read more…

17 வயது பையன் வாயில் 232 பற்கள்… கஷ்டப்பட்டு ‘பிடுங்கியெடுத்து’ மும்பை மருத்துவர்கள் சாதனை!

மும்பையில் பள்ளிச் சிறுவன் ஒருவனின் வாயிலிருந்து சுமார் 232 பற்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் ஆஷிக் கவை(17). சமீபகாலமாக ஆஷிக்கின் வலது கன்னத்தின் உட்பகுதியில் வீக்கம் இருந்து வந்துள்ளது.  (வீடியோ)
Read more…

மாதம் 2000 ரூபாவிற்கு மேல் தொலைபேசிக்கு ’றீலோட்’ செய்த 15 வயது யாழ் மாணவி

பிரபல பாடசாலை மாணவி ஒருவா் தனது கடையில் மட்டும் மாதம் 2 ஆயிரம் ரூபாவிற்கு மேல் றீலோட் செய்துள்ளதாக கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு வா்த்தகா் எமது இணையத்தளத்திற்குத் தெரித்துள்ளாா்.

Read more…

இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 08

இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல் ஜே.ஆரை கடுமையாக யோசிக்கவைத்திருக்க வேண்டும். காரணம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அதற்கு முன்னரே எதிர்த்துக் கொண்டிருந்த பிரேமதாச, நாடாளுமன்றத்தைக் கலைப்பேன் என்று மிரட்டல் விடப்பட்டவுடன் வாய்திறக்காமல் சில நாட்கள் இருந்திருந்தார்.
Read more…

விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-12

அடுத்து ராஜிவ் கொலைத் திட்டத்துடன் ரவியை தொடர்பு படுத்திய தடயங்கள். 1986லிருந்து ரவி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வந்தார். ரவியும், விடுதலைப்புலி இயக்க தளபதியாக இருந்த கிட்டுவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் 1988ல் சென்னை மத்திய சிறையில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு பெற்றது. 1988 அக்டோபரில் கிட்டு மற்றும் சிலருடன் ரவியும் இந்திய அமைதிப்படை மூலம் பலாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். யாழ்ப்பாண வனப்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து ரவி எடுத்துக்கொண்ட புகைப்படம், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைப்பற்றிய ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் ஒன்று.
Read more…

ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக  வலைத்தளங்களும்  செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

Read more…

10 ஆயிரம் ரூபாவிற்காக பெண்ணைக் கொலை செய்த கச்சாய் ரவுடி

பெண் ஒருவரிடம்  கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக்  தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (யாழ். இளவாலையில் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்)
Read more…

பொட்டு என்ற பொட்டம்மான் வைச்ச பொட்டு – (பகுதி- 03) -வடபுலத்தான்

பொட்டம்மான் வைச்ச பொட்டைப்பற்றிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்ன கதையையும் இஞ்ச ஒருக்கால் சொல்லவேணும். ‘அப்ப (1977 இல) தமிழீழத்தைப் பெற்றுத் தருவினம் எங்கட தமிழ்த்தலைவர்கள் எண்ட நம்பிக்கையிலயும்  அவை சொன்ன சொல்லுக்கு மதிப்புக் குடுத்துமே  தமிழ் இளைஞர்கள் தங்கட ரத்தத்தால இவைக்குப்  பொட்டு வைச்சவை. அப்பிடி வீரத்திலகத்தை வெற்றிப் பெருமிதத்தோட வாங்கித் தேர்தலில வெற்றி வாகை சூடிப்போட்டு, ‘அரசாங்கம் ஏமாத்துது. ஒண்டையும் செய்யிறதுக்கு அரசாங்கம் விடுகுதில்லை’ எண்ட நொட்டிச் சாட்டுச் சொல்லிறதுக்கு ஒரு தலைமை தமிழர்களுக்குத் தேவையில்லை.

Read more…

வீட்டிற்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர்: பெற்றோருக்கு கமெராவில் காத்திருந்த அதிர்ச்சி….(வீடியோ)

இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வீட்டிற்கு டியூசன் எடுக்க ஆசிரியர் ஒருவர் 3 வயது சிறுவனை பயங்கரமாக கொடுமை செய்துள்ளார்.  (வீடியோ)
Read more…

சாமி கும்பிடச்சொல்லி சுட்டுக் கொன்னுடுவாங்க…காதல்… கடத்தல்… கெளரவக் கொலைகள்!

”எங்கள் இனத்தில் வேறு இனத்தினரை திருமணம் செய்துகொண்டால் கொன்றுவிடுவார்கள். நான் வேறு இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டேன். அதனால் நிச்சயம் என் பெற்றோர் எங்களைக் கொன்றுவிடுவார்கள்” என்ற பகீர் புகாருடன் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றப் படியேறியிருக்கிறார் மஞ்சு.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு, கோவையைச் சேர்ந்த சுதாகரைத் திருமணம் செய்திருக்கிறார். திருமணமான ஒரே வாரத்தில் பிரிக்கப்பட்ட இந்த ஜோடி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். ஆனாலும், பதற்றம் குறையவில்லை.

Read more…

பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்து: குறைந்தது 13 பேர் பலி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். (வீடியோ)
Read more…

பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் – படத்துக்கு தடைகோரி வழக்கு


சென்னை: நான்கு இளம் பெண்களுடன் ஆபாச கோலத்தில் சாமியார் ஒருவர் உள்ளபடி சித்தரிக்கப்பட்டுள்ள சொர்க்கம் என் கையில் என்ற படத்துக்கு தடை கோரியுள்ளது ஒரு இந்து அமைப்ப. (மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் ஸ்ருதி.. ரேட் ரூ 2 கோடி!!)
Read more…

பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 08

பாகிஸ்தானின் அணுசக்தி வேலைத்திட்டத்தில் இருந்த விஞ்ஞானிகளில் அணுஆயுதத் தயாரிப்புக்குரிய ‘இயங்கும் சென்ட்ரிபியூச்’சுடன் வேலை செய்த அனுபவமுடைய ஒரேயொரு விஞ்ஞானி கான்தான் என்பதால் அவரால் பாகிஸ்தானின் அதிகார வர்க்கத்துடன் நெருங்க முடிந்தது.முக்கியமாக, பாகிஸ்தானின் பிரதமர் பூட்டோவை எந்த நேரத்திலும் போய்ச் சந்திக்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.அதையடுத்து, பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டத்தில் அவரது நிலை சிறிது சிறிதாக உயரத் தொடங்கியது.1976-ம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானின் பிரதமர் பூட்டோ புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கினார். அதன் பெயர் ERL (Engineering Reserch Laboratories) இதன் தலைவராக கானை நியமித்தார் பூட்டோ.இந்த அமைப்பு ஒரு சுயாதீனமாக இயங்கும் அமைப்பு என்று அறிவிக்கப்பட்டது.

Read more…

நோன்பிருந்த முஸ்லிமுக்கு உணவைத் திணித்த சிவசேனா எம்.பி. மீது 8 போலீஸ் வழக்குகள் உள்ளன

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி. ராஜன் விகாரே மீது 8 போலீஸ் வழக்குகள் உள்ளன என்று தானே முன்னாள் மேயர் கூறியுள்ளார். (வீடியோ)
Read more…

பில் கிளின்டன் – மொனிக்கா பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடல்: கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடலை ரஷ்யாவும், பிரித்தானியாவும் குறுக்கீடு   செய்து  ஒலிப்பதிவு  நாடாவை  இஸ்ரேலிய  பிரதமர் அச்சுறுத்தி  அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாக புதிய புத்தகம் ஒன்று உரிமை கோரியுள்ளது.

Read more…

இந்தியாவின் முதுகுக்கு பின்னால் பாகிஸ்தானை நோக்கி ரஷ்யாவின் கை நீளுவதை பார்த்தீகளா?

ஆயுத வியாபாரம் தொடர்பாக ரஷ்யா செய்ய தொடங்கியுள்ள ராஜதந்திர அளவிலான சில பேச்சுக்களை புதுடில்லி உன்னிப்பாக  கவனிக்க தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவின் கைகள் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் பக்கமாக நீளுவதை டில்லி உணரத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் பக்கமாக கை நீளுவது, தலையில் குட்டுவதற்கல்ல… கை குலுக்குவதற்கு!

Read more…

நடிகர் சூர்யா இன்று (23) பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று (23) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். 1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் இயக்குநர் வசந்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரவணன் என்கிற சூர்யா.

Read more…

ஒரே நபருடன் தாயும் மகளும் கள்ள உறவு.. கடைசியில் பறிபோனது மகளின் உயிர்.. கள்ளக்காதலன் சிறையில்!

கடலூர் அருகே மீனவர் ஒருவருடன் தாயும், மகளும் கள்ளக்காதலில் திளைத்தனர். ஆனால் இருவரிடமும் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விட்டார் அந்தக் கள்ளக்காதலன். கடைசியில் மகளுடன் ஏற்ப்டட தகராறில் 15 வயதேயான அந்த சிறுமியைக் கொலை செய்து விட்டார். தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கலாநிதி, தயாநிதிக்கு எதிரான வழக்கில் எப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

டெல்லி: சன்டைரக்ட் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி கைமாறியது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்த எப்.ஐ.ஆர் அறிக்கையில் உள்ள தகவல்கள் முக்கியமானவை. இதை வைத்துதான் தற்போது, வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Read more…