‘செக்ஸ் போதகர்’ அர்ச்சகர் தேவநாதன் வழக்கு விசாரணை வருகிறது

0
3753
ஏப். 19- காஞ்சீபுரம்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மே மாதம் 16-ஆம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர்  காஞ்சீபுரம்  பேருந்து  நிலையம்  அருகே  உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர், ஏப். 19- காஞ்சீபுரம்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மே மாதம் 16-ஆம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர்  காஞ்சீபுரம்  பேருந்து  நிலையம்  அருகே  உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.

இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி காவல்துறையினர் கருவறை நாயகன் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  அவரை காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை பேச்சின் ஜாலத்தில் மயக்கி முக்கிய பெண் வி.அய்.பி.களுடன் கோவில் கருவறையில் அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

கோவிலுக்குச் சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் மயக்க சாக்லெட் கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தார். இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் பாலியல் செயலில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அர்ச்சகர் தேவநாதனின்  கதை…..

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணியாற்றிய தேவநாதன் கோவிலுக்கு வந்து கடவுளிடம் கஷ்டங்களை சொல்லி கண்ணீர் விடு்ம் அபலை பெண்களை மயக்கியும், மிரட்டியும் விக்ரகம் இருக்கும் இடத்திலேயே வக்கீரத்துடன் நடந்து கொண்டும், கர்ப்ப கிரகத்துக்குள் கற்பழிப்புகளை அரங்கேற்றியும், அச்செயல்களை செல்போன்களில் பதிவு செய்து அதனையே ஆயுதமாக பயன்படுத்தி 18 முதல் 40 வயது பெண்கள் வரை தனது காம வக்கிர கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.

இந்த அசிங்க காட்சிகள் டெம்பிள் என்ற பெயரில் சிடிக்களாகவும், செல்போன்களில் எம்எம்எஸ் கிளிப்பிங்குகளாகவும் தமிழகம் முழுவதும் உலா வர ஆரம்பித்துள்ளன.

ஒரு காட்சியில், தேவநாதன் மந்திரங்களை சப்தமாக சொல்வதும், ஒரு 18 வயது மதிக்கத்தக்க சேலை கட்டிய அந்த பெண் சுவரில் சாய்ந்து நிற்பதும் பின்னர் அப்பெண்ணிடம் தேவநாதன் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடப்பதும், பி்ன் அந்த பெண்ணை கேவலமான செயலை செய்ய வற்புறுத்துவதும் உள்ளது.

இன்னொரு காட்சியில், ஆலயத்தின் மணி மட்டும் அடிக்கடி ஓசை எழுப்புகிறது. இதில் இடை இடையே ஆட்டோமெடிக் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் சப்தமும் கேட்கிறது. இந்த வீடியோ காட்சியை தேவநாதன் செல்போனில் எடு்க்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் வேறு நபர் தேவநாதனின் இந்த செயலுக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகிக்க முடிகிறது.

டெம்பிள் 7 என்ற வீடியோ பைலில் ப்ளூ கலரில் ஓயிட் பார்டர் கொண்ட சேலை உடுத்திய பெண் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நிற்கிறார். எடுத்த உடனேயே அந்த பெண்ணின் வாயோடு, வாய் வைத்து முத்தம் கொடுக்க தொடங்குகிறார். பின்னர் வாயோடு வாய் வைத்து சீண்டுவது போல் தொடர்கிறார். ஓரு கட்டத்தில் அப்பெண்ணிடம் மகா கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார். செல்போன் கேமரா, மேற்கூரை, என அந்த அறையை சுற்றி தாறுமாறாக சுழன்று வருகிறது.

டெம்பிள் 8 என்ற வீடியோ பைலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஊதா கலர் சேலை கட்டிய திருமணமான பெண் நிற்கிறார். ஒரு பல் உடைந்துள்ள அப்பெண்ணின் சேலையை உறிகிறார். அப்பெண் எவ்வளவோ வேண்டாம் என கைகூப்பி முகம் மூடி மன்றாடுகிறார். அப்பெண்ணிடம் சப்தம் போடாதே, ஒவ்வொன்றா பார்த்துதான் விடுவேன் என மிரட்டும் தொனியி்ல் பேசுகிறார்.

இடைஇடையே பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் போடும் சத்தம் காதை கிழிக்கிறது. அப்பெண் விட்டு விடு என்று கூறவே இரு இரு என தேவநாதன் மிரட்டுவதும் செல்கேமரா இஷ்டம்போல் சுழன்று விளையாடுவதும் போட்டோ கேமரா சப்தம் பளிச் என்று இடை இடையே கேட்கிறது.

4 பெண்களிடம் தனித்தனியே காமகொடூரத்தை அரங்கேற்றும் ஓவ்வொரு வீடியோ காட்சிகளும் இப்போது நெல்லை மாவட்டத்தில் சந்து, பொந்துகளில் சைனா மொபைல்களோடு வலம் வரும் இளைஞர்களிடம் பரவி கிடப்பது குறிப்பிடத்தக்கது.

அயோக்கிய அர்ச்சகரின் கொடூர காமலீலைகள் வீடியோ காட்சிகளுக்கு டெம்பிள் என தலைப்பு வைத்துள்ளதுத்தான் மிகக் கொடுமை.

தந்தை புலம்பல்…

தேவநாதனின் தந்தை பெயர் சுப்பிரமணி அய்யர். இவர் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரத்தைச் சேரந்தவர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அர்ச்சகராக இருந்தவர்.

சிறுவயதில் இருந்து படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். தேவநாதன். 5-ம் வகுப்பு வரையே படித்தார். பின்னர் தனது தந்தையுடன் கோவிலுக்கு செல்வது, பூஜைகள் செய்வது என கிளம்பினார்.

இதைப் பார்த்து வியந்த சுப்பிரமணி அய்யர், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வேத பாடக சாலையில் சேர்த்தார். அங்கு நன்றாக வேதங்களை கற்று தேர்ந்தார். ஆனால் அங்கு படிக்கும் காலத்திலேயே செக்ஸ் புத்தகத்தை வைத்து பார்த்து ரசித்துள்ளார். பாட புத்தகத்தின் நடுவில் ஆபாச படங்களை வைத்து இருந்துள்ளார். தேவநாதனுக்கு சிறுவயதிலேயே செக்ஸ் உணர்வு வேர்ஊன்றியது.

வாலிப பருவம் அடைந்த தேவநாதன் அதிகம் பெண்களிடமே பழகி வந்தார். இதனால் பெண்களின் மனதை நன்கு அறிந்து வைத்து இருந்தார். தேவநாதனுக்கு 23 வயதில் திருமணம் செய்ய முடிவு செய்தார் அவரது தந்தை.

வாலாஜாபாத் அடுத்த கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த கங்கா என்ற பெண்ணை தேவநாதனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தேவநாதனுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேவாதனின் மனைவி கங்காவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. இதனால் மனைவியை தேவநாதன் வெறுத்தார். மற்ற பெண்களிடம் மோகம் அதிகரித்தது.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக வேலை செய்த தேவநாதன் கோவிலுக்கு பிரச்சினையுடன் வரும் பெண் பக்தர்களை குறி வைத்து தன் காம பசிக்கு இறையாக்கினார். குடும்ப பாங்கான பெண்களை தான் தேவநாதனுக்கு அதிகம் பிடிக்குமாம்.

தேவநாதன் குறித்து அவரது தந்தை கூறுகையில்,

என் மகன் மிகவும் நல்லவன், அவன் வேதபாடசாலையில் வேதங்கள் கற்றவன். நல்லது கெட்டது அவனுக்கு நன்றாக தெரியும். அவன் தவறு செய்து இருக்க மாட்டான். ஆனால் தேவநாதனை பற்றி செய்திகள் வெளிவருவதை பற்றி நினைத்தால் பயமாக உள்ளது.

தவறு செய்து இருப்பானோ என்று என் நெஞ்சம் பதறுகிறது. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய் என்பதற்கு ஏற்ப என் மகனை பெருமையாக நினைத்தேன். ஆனால் என் மகனை உலகமே தூற்றுகிறது.

இதைக் கேட்கும் போது எனது மனம் மிகவும் வேதனை படுகிறது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதையே பகவான் தீர்ப்பாக கருதுகிறேன் என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.