கண், காது, மூக்கு, நாக்கில் ரத்தம் வழியும் அதிசய பெண்

0
1195

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு, நாக்கு, விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிவது எதனால் என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு, நாக்கு, விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிவது எதனால் என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள Stoke-on-Trent நகரில் 17 வயதான Marnie Harvey என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.


இவருக்கு 14 வயது ஆகும் வரை ஏனைய பெண்கள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து இவருக்கு ஒவ்வொரு அதிசய சம்பவங்கள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் படுக்கையில் இருந்த எழுந்தபோது, அவரது தலையணையில் ரத்த வழிந்துள்ளதை பார்த்து வியப்படைந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துள்ளார்.

அப்போது, அவரது மூக்கில் இருந்தும் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மகளின் முகத்தை கண்டு கண்ணீர் வடித்த தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

ஆனால், அவரது உடலில் எந்தவித நோயும் இல்லை என்பது முழுமையாக உறுதியானதால், ரத்தம் எதனால் வழிகிறது என்பது தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக இந்த இளம்பெண் இதே உடல்நிலையிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

ஒருநாள் திடீரென அவரது கண்ணில் இருந்து ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. கண்ணை தொடர்ந்து காது, விரல் நகங்களிலிருந்து உச்சந்தலையில் இருந்து என ரத்தம் வழிந்ததை கண்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல மருத்துவனைகளில் பரிசோதனை செய்யப்பட்டும், இதற்கான காரணத்தை மருத்துவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஒரு நாளில் 5 முறை இவ்வாறு ரத்தம் வழிவதால், அவர் நண்பர்களுடன் வெளியே செல்வதையே நிறுத்தி விட்டு தற்போது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.

இதற்போது மருத்துவமனை செல்வதை நிறுத்தியுள்ள அந்த பெண், சமூக வலைத்தளங்களில் தனது நிலையைக் கூறி அதற்கான தீர்வை கேட்டு வருகிறார்.துமட்டுமில்லாமல், இவரது பள்ளி படிப்பும் இந்த புரியாத புதிரால் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.