பத்து வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

0
324


குடும்பங்களுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர 10 வயது சிறுமியை 14 வயது சிறுவனுக்கு திருமணம் முடித்துவைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குடும்பங்களுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர 10 வயது சிறுமியை 14 வயது சிறுவனுக்கு திருமணம் முடித்துவைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சிறுமியின் சகோதரர் தனது மனைவியை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணவே கிராமத்தின் தலைவர்கள் இந்த திருமணத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கிராமத் தலைவர்களை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது ஆண் உறவினர் ஒருவர் செய்த குற்றத்திற்காக சிறுவயது பெண்களை திருமணம் முடித்து வைக்கு வழக்கம் பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபின் ரஹிம்யார் கான் மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமணமே பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 20 பேரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதில் சிறுமியின் சகோதரர் கள்ளத்தொடர்பு சந்தேகத்தில் மனைவியை கொன்று தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க ஒன்று கூடிய கிராமத் தலைவர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த இரு குடும்பங்களும் சிறுபான்மை ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.