ஆச்சர்யம் ஆனால் உண்மை: பிரித்தானிய இளவரசி உருவத்தில் மற்றொரு அதிசய பெண்

0
508


பிரித்தானிய நாட்டில் இளவரசி கேட் மிடில்டன்னின் தோற்றத்தில் அதிசய பெண் ஒருவர் வசித்து வருவதுடன், இந்த தோற்றத்தின் காரணமாக அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. (படங்கள்)

பிரித்தானிய நாட்டில் இளவரசி கேட் மிடில்டன்னின் தோற்றத்தில் அதிசய பெண் ஒருவர் வசித்து வருவதுடன், இந்த தோற்றத்தின் காரணமாக அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நபரை போன்று உலகத்தில் 7 பேர் இருப்பார்கள் என்பது பொதுமக்கள் மத்தியில் இருக்கும் மிக நீண்டகால நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையான சம்பவங்கள் பிரித்தானிய அரச குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருவது அந்நாட்டு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, மறைந்த இளவரசி டயானா உருவத்தில் ஒரு பெண், மகாராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதிபலிக்கும் ஒரு மூதாட்டி, குட்டி இளவரசர் ஜோர்ஜை நினைவுப்படுத்தும் மற்றொரு அதிசய சிறுவனின் வரிசையில் தற்போது இளவரசி கேட் மிடில்டன்னும் இணைந்துள்ளார்.


பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னை அப்படியே உரித்து வைத்தது போன்ற உருவத்தில் இருக்கும் Heidi Agan(35) என்ற பெயருடைய இந்த பெண் இங்கிலாந்தில் உள்ள Northamptonshire நகரில் வசித்து வருகிறார்.

இவருக்கு 14 மற்றும் 6 வயதுகளில் பிள்ளைகள் இருந்தாலும், கேட் மிடில்டன்னை நேரில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு இவரை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாது உண்மை.

இதைப் பற்றி Heidi Agan பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, ‘’பிரித்தானிய இளவரசரான வில்லியமிற்கு கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் கேட் மிடில்டன்னுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது, நான் Frankie & Benny’s என்ற ஹொட்டலில் உணவு பரிமாறும் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தேன்.

இந்த பணியில் வருமானம் குறைவு என்பதால், பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டேன். இந்த நேரத்தில் தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

இளவரசர் வில்லியமிற்கு நிச்சயம் நடந்து முடிந்ததும், இளவரசி கேட் மிடில்டன்னின் புகைப்படங்கள் ஒவ்வொரு வீதியிலும் ஒட்டப்பட்டதால் இளவரசி மிகவும் பிரபலமானார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு, ஹொட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் என்னை ஆச்சர்யமாக பார்க்க தொடங்கினார். எனக்கு அப்போது உண்மை புரியவில்லை.

‘நீங்கள் பார்ப்பதற்கு இளவரசி கேட் மிடில்டன்னை போன்று இருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என வாடிக்கையாளர்கள் போட்டி போட்டபோது தான் எனக்கு உண்மை விளங்கியது.

இந்த நிகழ்வுக்கு பிறகு, நான் வசிக்கும் நகர் மக்கள் அனைவரும் நான் இளவரசி கேட் மிடில்டன் தான் என நம்ப தொடங்கினர். பொதுமக்கள் மத்தியில் பிரபலமானதால், இதை வைத்து அதிக வருமானம் ஈட்ட தீர்மானித்தேன்.

பின்னர், அழகை மெருகேற்றும் நிறுவனங்களை தொடர்புக்கொண்டு தன்னை 100 சதவிகிதம் கேட் மிடில்டன்னாக மாற்றிக்கொள்ள பயிற்சி எடுத்தேன்.

கேட் மிடில்டன் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்களை சேகரித்து, அவரை போல் நடப்பது, முடியை கோதி விடுவது, உடுப்பு உடுத்துவது, சிரிப்பது என அனைத்து பாவனைகளையும் கற்றுக்கொண்டேன்.

இதன் பிறகு, 2012ம் ஆண்டு மே மாதம் Gatwick விமான நிறுவனம் என்னை அனுகி, அவர்களின் நிறுவனத்திற்கு விளம்பர மொடலாக நியமித்தனர்.

மேலும், அவர்களது பல்வேறு சேவைகளையும் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினேன்.

இதன் மூலம் எனக்கு அதிக வருமானம் வந்ததால், என்னுடைய பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ‘இளவரசி கேட் மிடில்டன்னாக’ வெளிநாடுகளுக்கு பறப்பதை முக்கிய தொழிலாக மாற்றிவிட்டேன்.

கடந்த 2014ம் ஆண்டு அவுஸ்திரேலியா நாட்டிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக பயணமானபோது, இளவரசர் வில்லியமை போன்று உருவத்தில் இருக்கும் மற்றொரு நபரை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எங்களை உண்மையான இளவரசர்-இளவரசியாக நினைத்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

இதுமட்டுமில்லாமல், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தோற்றம் உள்ள ஒரு மூதாட்டியுடன் இணைந்து அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறேன்.

இந்த புதிய தொழில் மூலம் எனக்கு ஒரு கிழமைக்கு 9,000 பவுண்ட்(18,25,384 இலங்கை ரூபாய்) வருமானம் கிடைப்பதால், வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது’’ என Heidi Agan உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.