ரூ. 60 ஆயிரம் கோடிக்கு ரஃபேல் போர் விமானம்: டாய்லெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மாணவி!

0
245

ந்தியாவின் 67வது குடியரசுத்தின விழா நேற்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். பிரான்ஸ் அதிபர் ஹாலெண்டே,  குடியரசு தின விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தார். அவருடன், 60 ஆயிரம் கோடி அளவிற்கு ரஃபேல் போர் விமானத்தை வாங்க, மத்திய பாரதிய ஜனதா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ந்தியாவின் 67வது குடியரசுத்தின விழா நேற்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். பிரான்ஸ் அதிபர் ஹாலெண்டே,  குடியரசு தின விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தார். அவருடன், 60 ஆயிரம் கோடி அளவிற்கு ரஃபேல் போர் விமானத்தை வாங்க, மத்திய பாரதிய ஜனதா அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதே குடியரசு தினத்துக்கு ஒருநாள் முன்னதாக,  வீட்டில்  கழிப்பறை இல்லாதததால், கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம்,  குண்டலா கிராமத்தை சேர்ந்தவர் ரேகா. தற்போது 17 வயதே நிரம்பிய அவர், 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

ரேகா பள்ளி படிப்பை முடித்து இன்டர்மீடியேட் சேர்ந்த பின்னர், வீட்டிற்கு கழிப்பறை தேவையென்பதை உணர்ந்து கொண்டார். கல்லூரி மாணவியான அவர்,  கடந்த 7 மாதங்களாக பெற்றோரிடம் வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு பெற்றோரை வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவரது தந்தைக்கோ வறுமை காரணமாக கழிப்பறை கட்டித் தர முடியாத நிலை. மகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத நிலை அவருக்கு. இந்நிலையில்  கடந்த திங்களன்று,  வீட்டில் கழிப்பறை இல்லாத வேதனையில், ரேகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரேகாவின் தற்கொலை குறித்து அவரது தாய் லல்லம்மா கூறுகையில்,” எனது மகள் கல்லூரிக்கு சென்ற பின்,கழிவறை வேண்டும் கழிவறை வேண்டுமென்றே கூறிக் கொண்டிருந்தாள்.

சங்கராந்தி விடுமுறைக்கு பின், படிக்க போகவும் மறுத்து விட்டாள்.  டி.வி.யில் வரும் கழிவறை தொடர்பான விளம்பரங்கள் வரும் போது எங்களிடம் காட்டுவாள். ஆனால் எங்கள் வீட்டில் கழிவறை கட்ட நிலமும் இல்லை. கையில் பணமும் இல்லை. எங்கள்  இயலாமையால் அருமை மகளை இழந்து நிற்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.

நடிகை வித்யா பாலன் நடித்த விளம்பரத்தை தனது பெற்றோரிடம் காட்டி, ”இதனை பார்த்தாவது திருந்துங்களேன்” என்று ரேகா சொல்வது வழக்கமாம். தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதியுள்ள ரேகா, ”அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது… நான் ஒரு கல்லூரி மாணவி, எனது உணர்வுகளை புரிந்து கொள்ளுங்களேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட ரேகாவின் வீடு மட்டுமல்ல, குண்டலா கிராமத்தில் உள்ள பாதி வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. தெலுங்கானாவில் உள்ள 48 சதவீத கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது.

ரூ. 60 ஆயிரம் கோடிக்கு ரஃபேல் போர்  விமானங்ளை வாங்கத் திட்டமிடும் அரசுக்கு,  ரேகா போன்றவர்களின் வேதனை எங்கே தெரிய போகிறது?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.