“ஆபத்து” உரு­வா­கி­யுள்­ளது: பாராளுமன்றத்தில் மஹிந்த

0
141

நாட்டில் மீண்டும் விடு­தலைப் புலிகள் அமைப்பு தலை­தூக்கும் “ஆபத்து” உரு­வா­கி­யுள்­ளது. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் தெரி­வித்தார். பிரித்தானியாவிடம் பணம் பெற்று எமது படை­யி­னரை மீளி­ணைப்பு செய்யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டாம். அது எமது நாட்டின் இறை­யாண்­மையை பாதிக்கும் என்றும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு–செலவுத் திட்­டத்தின் தேசிய பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்­பான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மஹிந்த ராஜ­பக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் விடு­தலைப் புலிகள் அமைப்பு தலை­தூக்கும் “ஆபத்து” உரு­வா­கி­யுள்­ளது. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் தெரி­வித்தார்.

பிரித்தானியாவிடம் பணம் பெற்று எமது படை­யி­னரை மீளி­ணைப்பு செய்யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டாம். அது எமது நாட்டின் இறை­யாண்­மையை பாதிக்கும் என்றும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு–செலவுத் திட்­டத்தின் தேசிய பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்­பான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மஹிந்த ராஜ­பக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

உல­கி­லேயே கடு­மை­யாக பயங்­க­ர­வா­திகள் என பட்­டி­ய­லி­டப்­பட்ட விடு­தலைப் புலிகள் அமைப்பை நாம் தோல்­வி­ய­டையச் செய்தோம். யுத்த ரீதி­யாக ஒழித் தோம். ஆனால் அதன் பின்னர் மூன்று தட­வைகள் புலி

கள் தலை­தூக்க முயற்­சித்­தார்கள். எமது உளவுப் பிரி­வினர், படை­யி­னரின் நட­வ­டிக்­கை­யினால் தடுக்­கப்­பட்­டது.

ஆனால் இன்று வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. ஈழம் சுவ­ரொட்­டிகள் காட்சிப் படுத்­தப்­பட்­டன. பாடல்கள் இசைக்­கப்­பட்­டன. பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் நினைவுக் கூரல்கள் இடம்­பெற்­றன. இவை தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அத்­தோடு 18 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்டான். உண்­மையில் இது தற்­கொ­லையா? அல்­லது தூண்­டி­வி­டு­தலில் இவ்­வா­றான செயல் மேற்­கொள்­ளப்­பட்­டதா? என்­பது தொடர்பில் ஆராய வேண்டும்.

எனவே இந்த மர­ணத்தின் பின்­னணி விசா­ரிக்­கப்­பட்டு உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்த சம்­ப­வங்கள் அனைத்­தையும் பார்க்கும் போது விடு­தலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலை­தூக்கும் ஆபத்து தென்­ப­டு­கின்­றது.

எனவே அர­சாங்கம் இவ்­வி­டயம் தொடர்­பிலும் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பிலும் அதிக கவனம் செலுத்தி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.வெளி­நா­டு­களில் இயங்­கிய விடு­தலை புலி அமைப்­பு­களின் நபர்­களை நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்பில் கவனம் செலுத்தி சர்­வ­தேச பிரஜை பிர­க­ட­னத்­திற்கு அமை­யவே தடை செய்தோம்.

ஆனால் அர­சாங்கம் இன்று இவ்­வாறு தடை செய்­யப்­பட்ட அமைப்­புக்கள் நபர்கள் மீதான தடை­களை நீக்­கி­யுள்­ளது. இவர்­களில் சிலர் புலிக் கொடி­களை ஏந்தி போராட்டம் நடத்­தி­ய­வர்கள்.

அரசு பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­கி­றது. ஆனால் பயங்­க­ர­வாதச் தடைச் சட்­டத்தை பயன்­ப­டுத்தி எமது படை­யினர் சிறையில் அடைக்­கப்­ப­டு­கின்­றனர். இது அநீ­தி­யான செயற்­பா­டாகும்.

வெளி­நா­டுகள் இன்று எமது படை­யி­னரை குறைப்­பது எப்­படி, படை­யினர் எப்­படி செயற்­பட வேண்டும் என்­பது தொடர்பில் அர­சுக்கு ஆலோ­ச­னை­களை வழங்­கு­கின்­றன.

இதனை அரசு பெற்றுக் கொள்ளக் கூடாது. நிரா­க­ரிக்க வேண்டும். இதனால் எமது நாட்டின் இறை­யான்மை பாதிக்­கப்­படும்.எமது பாது­காப்பு படை நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நாமே தீர்­மா­னிக்க வேண்டும். அதை­வி­டுத்து வெளி­நா­டுகள் தீர்­மா­னிக்க முடி­யாது.

ஜனா­தி­ப­தியை சந்­தித்த பிரிட்டன் பிர­தமர் கெமரூன் இலங்கை இரா­ணு­வத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப நிதி வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.இவ்­வாறு பிரிட்­டனின் நிதியை பெற்று எமது படை­யி­னரை மீளக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய அவ­சியம் கிடை­யாது.

யுத்­தத்­திற்கு பின்னர் நாங்கள் வடக்கில் மக்­களை மீள குடி­யேற்­றினோம், அடிப்­ப­டை­வ­ச­தி­களை மேம்­ப­டுத்­தினோம். ஆனால் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் இவை­யெ­த­னையும் செய்­யாது நல்­லி­ணக்கம் தொடர்­பாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதை விடுத்து வேறு எத­னையும் செய்­ய­வில்லை.

எமக்கு எதி­ராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் விவாதத்திற்கு வந்துள்ள நிலையில் யுத்தத்திற்கு பங்களிப்பு செய்த முதன்மை படை அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்கவும் வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

இதனை நிறுத்துங்கள். அவர்களுக்கு உயிராபத்து உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் வேண்டாம் என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.