சீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்

0
2356

சீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (படங்கள்)

சீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் யூன்டாய் மலையின் மேல் ஹெனான் என்ற பகுதியில் யு வடிவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்கையில், மலையின் அழகை மட்டும் அல்லாமல், கீழ்ப் பரப்பையும் கண்டு ரசிக்க முடியும்.

இந்தப் பாலம் இரண்டு கண்ணாடிப் பரப்பையும், மூன்று தரையமைப்பையும் கொண்டதாக மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்ட போதும், அந்த பாலத்தைக் கடந்து செல்லும் பெரும்பாலான பயணிகள் பயந்து கொண்டேதான் செல்வார்கள்.

சிலர் பயத்தில் நடக்காமல், உட்கார்ந்து தவழ்ந்தபடியே செல்வதையும் பார்க்க முடியும்.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணி ஒருவர் கொண்டு வந்த ஒரு பொருள் பாலத்தில் வீழ்ந்ததால் அதில் லேசான கீறல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

குறித்த பொருள் வீழ்ந்த போது, பாலத்தைக் கடந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்து போனதாகவும், சிலர் பாலத்தின் முடிவுப் பகுதியை நோக்கி ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தைப் பராமரிக்கும் குழுவினர், விரிசலை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.