உ/த பரீட்­சைக்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கா­ததால் மாணவி தற்­கொலை! பாட­சாலை அதிபர் இடை நிறுத்தம்

0
1691

வவு­னியா, பண்­டா­ரிக்­குளம், விபு­லா­னந்தா வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த 19 வய­தான கு.திவ்யா என்ற மாண­வியே தனது வீட்டு கிணற்றில் குதித்து இவ்­வாறு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக் கும் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீ ட்­சைக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்தை பாட­சாலை அதிபர் வழங்­கா­ததால், மாண­வி­யொ­ருவர் தற்­கொலை செய்­து­கொண்ட சம்­ப­வ­மொன்று வவு­னி­யாவில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

வவு­னியா, பண்­டா­ரிக்­குளம், விபு­லா­னந்தா வித்­தி­யா­ல­யத்தைச் சேர்ந்த 19 வய­தான கு.திவ்யா என்ற மாண­வியே தனது வீட்டு கிணற்றில் குதித்து இவ்­வாறு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

தனது தற்­கொ­லைக்­கான கார­ணத்தை கடி­த­மொன்றில் எழு­தி­வைத்­து­விட்டே அம்­மா­ணவி தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார் என வவு­னியா பொலிஸார் கூறி னர்.

இந்த மாணவி க.பொ.த.சாதா­ர­ண­தர பரீட்­சையில் கணித பாடத்தில் சித்­தி­ய­டை­யாத போதிலும் உயர் தரம் கற்­ப­தற்கு பாட­சா­லையால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்தும் கணித பாடம் சித் ­தி­ய­டை­யா­மை­யி­னா­லேயே உயர்­தர பரீட்­சைக்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, மேற்­படி சம்­பவம் தொட ர்­பான விசா­ர­ணைகள் முடி­வ­டை­யும்­வரை, பண்­டா­ரிக்­குளம், விபு­லா­னந்தா வித்­தி­யா­லய அதி­பரை பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கல்வி அமைச்சும் பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.