பெண் குழந்தையுடன் மது அருந்தும் பெண் வாட்ஸ் அப்பில் உலா வரும் படம்

0
2677
மதுரை: தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கு மது கொடுக்கும் வீடியோ காட்சிகள், படங்கள் வெளியாகி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், சோழங்குப்பம் பகுதியில் 4 வயது ஆண் குழந்தைக்கும், மதுரை பகுதியில் 3 வயது ஆண் குழந்தைக்கும் மது கொடுத்த காட்சிகள் வெளியாகின.

இதில் டூவீலர் எண்ணைக் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட சம்பவத்தில் மட்டும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை பகுதியில் குழந்தைக்கு மது கொடுத்த சம்பவத்தில் காட்சிகளில் பதிவானோர் படங்களை வைத்து தென்மண்டல போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு காவல் நிலையங்களுக்கும் இந்த படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.

இந்நிலையில் ஓர் இளம்பெண், பெண் குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து, அவரும் அருகில் அமர்ந்து மது குடிப்பது போன்ற அவலக்காட்சி கொண்ட போட்டோ பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த ஒருவர் இந்த படப்பதிவினை, மதுரையைச் சேர்ந்தவர்களது பேஸ்புக்கில் பதிவிறக்கம் செய்திருப்பதும், இதன் வழி வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக தொடர்ந்து பரவி வருவதும் தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து, பெண் குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்திருக்கும் இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.