ஒரு பெண்ணாக தமிழகத்தில் ஆட்சி புரிவது எளிதல்ல!

0
307

அ.தி.மு.க.,வின், 41ம் ஆண்டு தொடக்க விழா, இன்று நடக்கிறது. அதையொட்டி, கட்சியினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்..
அ.தி.மு.க.,வின், 41ம் ஆண்டு தொடக்க விழா, இன்று நடக்கிறது. அதையொட்டி, கட்சியினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

‘’அண்ணாதுரை மறைவுக்குப் பின், எம்.ஜி.ஆர்., வழியாக, தி.மு.க.,வுக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். எம்.ஜி.ஆரை., கட்சியிலிருந்து வெளியேற்றினார் .அதனால், மக்களின் வேண்டுகோளின்படி, அ.தி.மு.க.,வை துவக்கி, மக்கள் பணியை எம்.ஜி.ஆர்., தொடர்ந்தார். திராவிட இயக்க கொள்கையை காக்கவும், அண்ணாதுரையின் அரசியல் பணிகளை தொடரவும், அ.தி.மு.க., தொண்டர்களை காப்பாற்றும் பணியையும், எம்.ஜி.ஆர்., என்னிடம் ஒப்படைத்தார்.

எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியபோது, என்னை அழிக்க துடித்தனர்.

ஆனால், என் வாழ்வை, கட்சித் தொண்டர்களை காப்பதற்காக, அர்பணித்துக் கொண்டேன். ஒரு பெண்ணாக, தமிழகத்தில் அரசியல் வாழ்வு நடத்துவது எளிதல்ல. வஞ்சகமும், சூழ்ச்சிக்கு அஞ்சாமல், மனசாட்சிக்கு சரியென தெரிந்தவரை, பணிகளை நிறைவேற்றி வருகிறேன்.

இது, மன நிறைவையும், நிம்மதியையும் எனக்கு அளிக்கிறது. தமிழகத்தை முதல் மாநிலமாக்க, எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். தமிழகத்தின் பல திட்டங்களை, பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. எனக்கு சுய நல நோக்கம் இல்லை.

“உங்களுக்காக நான், உங்களால் நான்´ என்பதை வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளேன். தேச அளவில், தமிழகம் தலைகுனித்த நிற்கும்படி, பல கோடிகளை கொள்ளையடித்தவர்களை மக்கள் புறக்கணித்தனர். நடந்ததை மக்கள் மறந்திருப்பர் என நினைத்து, மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றனர்.

மக்களோ, இன்னும் பல வெற்றிகளை, அ.தி.மு.க.,வுக்கு வழங்க தயாராக இருக்கின்றனர். பெண்கள் முன்னேற்ற திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா அரிசி, மடிகணினி திட்டங்கள், கிராமப்புற பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் என, பல திட்டங்கள் தொடரும்.இதன்மூலம், தமிழக மக்களின் வாழ்வு மலரும் என, உறுதியளிக்கிறேன். நாம் ஈட்டிய வெற்றிகளையும், சாய்த்திட்ட எதிரிகளின் கணக்குகளையும் எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அதேவேளையில், கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தோரையும், உயிர் நீத்தவர்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். எதற்காக அ.தி.மு.க., துவங்கப்பட்டதோ, மக்கள் எதற்காக அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அதற்கு உண்மையாக, ஒவ்வொரு தொண்டரும் பணியாற்றவேண்டும்.

கட்சியின், 41வது தொடக்க விழாவை, நகரம், ஒன்றியம், கிராமம், கிளை, வார்டு என, அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.