நடிகை ஹேமாஸ்ரீ கொலையில் கார் டிரைவருக்கு தொடர்பு?

0
375

கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீ    மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.  இதையடுத்து…
கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீ    மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஹேமாஸ்ரீயின் கணவர் சுரேந்திரபாபு கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஹேமாஸ்ரீயை பெங்களூரில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபுரத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கியதாகவும் அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது.

சுரேந்திரபாபுவின் மொபைல் போனை போலீசார் கைப்பற்றி ஆராய்ந்தனர். அப்போது ஹேமாஸ்ரீ இறந்த பிறகு ஆந்திர மந்திரி ஒருவருடன் சுரேந்திரபாபு பலமுறை பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மந்திரியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொலை நடந்த பிறகு சுரேந்திரபாபுவின் கார் டிரைவர் சதீஷ் தலைமறைவாகி விட்டார். அவருக்கும், இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது.

இதற்கிடையில் சதீஷ் கோர்ட்டில் முன்ஜாமீன், கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். சுரேந்திரபாபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ஹேமாஸ்ரீ வர மறுத்ததால் குளோரபாம் கொடுத்து மயக்க நிலையில் அழைத்து சென்றேன். வழியில் மயக்கம் தெளிந்ததால் இன்னும் கூடுதலாக குளோரபாம் கொடுத்தேன். இதில் ஹேமாஸ்ரீ இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.