நடிகை ஸ்ரேயாவுடன் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி: என்ன உறவு?

0
216

சர்ச்சைக்குரிய  எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடந்த பட விழாவுக்கு  நடிகை ஸ்ரேயாவுடன் வந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  (படங்கள், வீடியோ)
சர்ச்சைக்குரிய  எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடந்த பட விழாவுக்கு  நடிகை ஸ்ரேயாவுடன் வந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் பிறந்தவர் சல்மான் ருஷ்டி. தான் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் என்றப் நூல் மூலம் ஈரான் மதத் தலைவர் கொம்னியின் கடும் கோபத்துக்கு உள்ளாகி, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

இங்கிலாந்தில் நிரந்தரமாக வசித்து வரும் விட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவர் 1981ம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நாவல் திரைப்படமாகிறது.

இந்தப் படம் லண்டனில் தொடங்கியுள்ள 56வது பி.எப்.ஐ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் பட விழாவுக்கு தன்னுடன் படத்தின் நாயகியான ஸ்ரேயாவையும் உடன் அழைத்து வந்திருந்தார் ருஷ்டி.

இதனால் பட விழாவுக்கு வந்த அத்தனை பேரின் கண்களும் ஸ்ரேயா மீதுதான் இந்த ஜோடி மீதே விழுந்தன. சல்மான் ஏற்கனவே நான்கு தடவை திருமணம் ஆனவர்.  மேலும் பல பெண்களுடன் காதல் தொடர்பு வைத்திருந்தவர்.

தற்போது அவர் ஸ்ரேயாவுடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளமையானது அனைவரது புருவத்தினையும் உயர்த்தச் செய்துள்ளது.

இவர்களுக்கிடையில் என்ன உறவு என அனைவரும் தற்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.