வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம்[படங்கள் இணைப்பு]

0
756
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம் செவ்வாய்கிழமை இடம் பெற்றது. (படங்கள்)

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி; மற்றும் தீ மிதிப்பு உற்சவம் செவ்வாய்கிழமை இடம் பெற்றது.

கடந்த 2015.05.29ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்கள் மதியப் பூசை, இரவுப் பூசை என்று இடம் பெற்று செவ்வாய்கிழமை திருக்குளிர்த்தி மற்றும்; தீ மிதிப்பு நிகழ்வு இடம் பெற்றதுடன், இறுதியில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

சடங்கு உற்சவ பூசை நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாளை, கல்மடு, கறுவாக்கேணி, சுங்காங்கேணி உட்பட பல கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு தீ மிதிப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுன் விளையாட்டுக் கழகத்தினரால் பக்த அடியார்கள் அனைவரும் தாக சாந்தியினை வழங்கி வைத்தனர்.

LEAVE A REPLY

*