10 கல்யாணம்… அனைவருடனும் தேனிலவு… நோ டைவர்ஸ்: கல்யாண ராணியின் கதை

0
2035
நியூயார்க்: மனதிற்கு பிடித்த நபர்களை காதலிப்பது ஒருவிதம் என்றால் பிடித்த ஆண்களை எல்லாம் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி சரித்திர சாதனை! படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்யாண ராணி.
நியூயார்க்: மனதிற்கு பிடித்த நபர்களை காதலிப்பது ஒருவிதம் என்றால் பிடித்த ஆண்களை எல்லாம் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி சரித்திர சாதனை! படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்யாண ராணி.

இதில் ஒரே ஒரு சிறப்பு என்னவென்றால் யாரையும் விவாகரத்து செய்யாமல் வாழ்வதுதான். ஆனால் இப்போது அந்தப் பெண் பத்து ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்திற்காக சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

சித்தப்பா எத்தனை நாளைக்குத்தான் சும்மா உள்ளூர் செய்திலேயே வர்றது… நல்லா பெரிய திருட்டா பண்ணா டிவியில பேட்டி எடுப்பாங்க இல்ல என்று பருத்தி வீரனில் சொல்வார் கார்த்தி. அதுபோல இந்தப் பெண் செய்த திருமணம் அமெரிக்காவின் ஏபிசியில் பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த லியானா கிறிஸ்டியானா பேரியன்டாஸ் என்ற பெண்தான் இந்த நான் அவளில்லை டைப் மங்கை. இவர் ஒரு திருமண பிரியர். அவருடைய கண்ணில்பட்டு மனதுக்குள் மணியடித்தால் போதும் உடனே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வார்.

இப்படி 10 ஆண்களை ஊரறிய திருமணம் செய்து இருக்கிறார். அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி இந்தப் பெண் தான் திருமணம் செய்த 10 பேரையும் விவாகரத்து செய்யாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார் என்பதுதான் சிறப்பம்சம்.
99ல் தொடங்கிய பயணம்
இவர் தனது முதல் திருமணத்தை கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் தொடங்கினார். 2001 ஆகஸ்டில் ஒரு திருமணம், அதே ஆண்டு நவம்பரில் மற்றொரு திருமணம் செய்தார்.

காதலர் தினத்தில்

2002-ம் ஆண்டு அவருக்கு பிசியான ஆண்டாக அமைந்தது. ஜனவரி 3ஆம் தேதி ஒருவரை மணந்தார். அதே ஆண்டு காதலர் தினத்தன்று மற்றொருவரை மணமுடித்தார். தொடர்ந்து மார்ச், மே, ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் மூன்று பேரை திருமணம் செய்தார்.

10 பேருடன் தேனிலவு

திருமணத்திற்கு சில ஆண்டுகள் பிரேக் விட்ட அவர் கடந்த 2010ஆம் ஆண்டு மற்றொரு திருமணம் என 10 திருமணங்கள் செய்தார். அந்த ஆண்களுடன் தேன்நிலவு கொண்டாடினார்.

பல ஆண்கள் பல நாடுகள்

தற்போது அவருக்கு 39 வயது ஆகிறது. இவரது கணவர்களின் கடைசி பெயர்கள் ஜெர் பிரில், அல்லாம், ரஹ்மான், கொரிடிஷ், சாக்டெப், ராஜேஷ் ராஜ்புத், கெய்தா என்பதாகும். எகிப்து துருக்கி, ஜார்ஜியா, பாகிஸ்தான், மாலி நாட்டை சேர்ந்த ஆண்களை அவர் திருமணம் செய்து உள்ளார்.

மோசடி திருமணங்கள்

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு இவர் மீது பல திருமணங்கள் செய்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த குற்றம் நிருபிக்கபட்டால் அவருக்கு 4 வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாம். நீதிமன்றத்திற்கு போய் நான் அவளில்லை என்று சொல்லாமல் இருந்தால் சரிதான். இந்த பெண்ணின் மல்டி சிம் ஆக்டிவேட் பற்றிதான் ஏபிசியில் ஹாட் நியூஸ் போங்க!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.