ஹோலி விழாவில் ஆபாச போஸ்: கவர்ச்சி நடிகை தலைமறைவு!

0
2781

மும்பை: ஹோலி விழா அன்று அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த ஹிந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.(படங்கள்)

மும்பை: ஹோலி விழா அன்று அரைகுறை ஆடையில் ஆபாச போஸ் கொடுத்த ஹிந்தி நடிகை சோபியா கயாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சோபியா கயாத் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கும் நடிகை என்பதால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துள்ளார்.

சமீபத்தில் ஹோலி பண்டிகை நாளன்று கவர்ச்சி போஸில் தன்னை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டார். இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் வண்ணப் பொடிகளை பூசி ஆபாசமாக இந்த படத்தை அவர் எடுத்து இருந்தார்.

இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஹோலி என்பது ஆன்மீக பண்டிகை. அதை சோபியா கயாத் கொச்சைப்படுத்தி உள்ளார் என்று எதிர்த்தனர். அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். சோபியாவிடம் நேரில் விசாரிக்கவும் தேடிவருகின்றனர். அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.