காதலியின் 12 வயது மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன் – போலீசால் கைது

0
247

கோவில்பட்டியில் 7 ஆம் வகுப்பு மாணவியினை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 7 ஆம் வகுப்பு மாணவியினை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய்.

இவரது மகள் லட்சுமி. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தீக்குச்சி கம்பெனிக்கு இசக்கிதாய் வேலைக்கு சென்றார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிவகாசியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இசக்கிதாய்க்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கி தாய் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் மீண்டும் கோவில்பட்டியில் உள்ள பாரதியார் நகருக்கு குடிபெயர்ந்தார்.

இசக்கிதாயின் மகள் லட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இசக்கித்தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த இசக்கிதாய் அவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். பள்ளி மாணவியான லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திடீரென குடிபோதை தலைக்கேறிய மணிகண்டன் தனது கள்ளக்காதலியின் மகள் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவில்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.