குஷ்பு காங்கிரசில் சேர்ந்தார்- (வீடியோ)

0
375

நடிகை குஷ்பு,  சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  திமுக முக்கிய பேச்சாளராக விளங்கிய  நடிகை குஷ்பு, குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார்.

திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இன்று புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த அவர் கட்சியில் இணைந்தார்.

திமுகவில் சமீப காலம் வரை நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகை குஷ்பு , திமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சமீபத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இன்று புதன்கிழமை அவர் டில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் உடனிருந்தார்.

இன்று புது தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவது தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரவிருக்கிறார் என்று வந்த தகவல்களை மறுத்த அவர், அது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார்.

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி காங்கிரஸ்தான் என்றும் அவர் கூறினார்.

இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தமிழக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன், அவரது வருகை காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஜிகே வாசன் விலகியதை அடுத்து, நடிகை குஷ்பு அக்கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு ஆதரவாக அமையும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

*