திருமணத்தன்று அழுத அர்பிதா: ‘கொலவெறி’யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்

0
2086

திருமண நாள் அன்று தங்கை அர்பிதாவை அழ வைத்தவரை நடிகர் சல்மான் கான் கோபத்துடன் தேடியுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் ஷர்மாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் திருவிழா போன்று திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும்.

ஹைதராபாத்: திருமண நாள் அன்று தங்கை அர்பிதாவை அழ வைத்தவரை நடிகர் சல்மான் கான் கோபத்துடன் தேடியுள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் ஷர்மாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் திருவிழா போன்று திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் திருமணத்தன்று நடந்த ஒரு சம்பவம் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.

அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் அர்பிதாவின் திருமண உடையை வடிவமைத்துள்ளனர். கோஸ்லா தானே நேரில் வந்து ஆடையை அர்பிதாவிடம் அளித்தார். அதை பார்த்த அர்பிதா டிசைன் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.இதை கேட்டு கடுப்பான கோஸ்லா உங்கள் உடல்வாகிற்கு இப்படி தான் ஆடையை வடிவமைக்க முடியும் என்று முகத்தில் அடித்தது போன்று தெரிவித்துவிட்டாராம்.

இதை கேட்ட அர்பிதா கண்கலங்க அது குறித்து அறிந்த சல்மான் கான் கோபத்தில் கொந்தளித்து கோஸ்லாவை தேடி அலைந்துள்ளார்.

சல்மான் கையில் சிக்கினால் சட்னி தான் என்பதை அறிந்த கோஸ்லா ஜெயா பச்சனிடம் சென்று தன்னை காப்பாற்றுமாறு    தெரிவித்துள்ளார். அவரும் வந்து சல்மானை சமாதானம் செய்து வைத்தாராம். அர்பிதா கடைசி பிள்ளை  என்பதால்  சல்மான், அர்பாஸ், சொஹைல்  கானுக்கு அவர் என்றால் உயிர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.