ராஜபக்சேவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கத் தயார்: சம்பந்தன்

0
256

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காண்­ப­தற்கு நாம் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்­திய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்­ப­டுத்தத் தவ­றி­விட்­டது எனத் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் தலை­வரும்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தேர்­த­லுக்­கான அறி­விப்­பொன்று இன்­ னமும் வெளியி­டப்­ப­டாத நிலையில் அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷவின் அழைப்பை நிரா­க­ரிக்­காது ஆழ­மாக கவ­னத்தில் எடுக்­க­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காண்­ப­தற்கு நாம் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்­திய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்­ப­டுத்தத் தவ­றி­விட்­டது எனத் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் தலை­வரும்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தேர்­த­லுக்­கான அறி­விப்­பொன்று இன்­ னமும் வெளியி­டப்­ப­டாத நிலையில் அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷவின் அழைப்பை நிரா­க­ரிக்­காது ஆழ­மாக கவ­னத்தில் எடுக்­க­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும். அவ்­வாறு ஆத­ர­வ­ளிப்­பதன் மூலம் அக்­கட்சி அனை­வரும் ஏற­றுக்­கொள்­ளக்­கூ­டிய அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும்.அந்த வகையில் இச்­சந்­தர்ப்­பத்­தினை கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஷ­பக்ஷ விடுத்­துள்ள அழைப்பு தொடர்­பாக வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யுத்தம் நிறை­வ­டைந்த பின்­ன­ரான காலத்­திலும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இரண்டாம் முறை­யாக தெரிவு செய்­யப்­பட்ட பின்­னரும் இல­கு­வாக இந்த நாட்டின் தேசிய பிரச்­சி­னையை தீர்த்து நிலை­யான சமா­த­னாத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருந்­தி­ருக்­கின்றோம்.

தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களைப் பெற்று கௌர­வ­மாக தலை­நி­மிர்ந்து வாழும் வகையில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்­கா­கவும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் எழுத்து மூல­மாக உட்­பட பல்­வேறு வழி­களில் எமது நல்­லெண்ண வௌிப்­பா­டு­களைச் செய்­தி­ருந்தோம்.

யுத்­தத்தின் பின்னர் வடக்­கிலும் கிழக்­கிலும் பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. விசே­ட­மாக காணி­வி­வ­காரம், இரா­ணுவ மய­மாக்கல், இளைஞர் யுவ­தி­களின் தொழில் வாய்ப்­புக்கள் தொடர்­பான விட­யங்கள் உட்­பட பல பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி நிரந்­த­ர­மான தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல வழி­களில் நாம் முயற்­சி­களை முன்­னெ­டுத்த போதும் அது கைகூ­டி­யி­ருக்­க­வில்லை.

நாம் கண்­ணி­ய­மாக வௌிப்­ப­டுத்­திய நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்­ப­டுத்த தவ­றி­விட்­டது. தற்­போதும் கூட அதற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இவ்­வா­றான கருத்தை வௌியிட்­டி­ரு­கின்றார்.

இந்தக் கருத்தை நாம் நிரா­க­ரிக்க மாட்டோம். தற்­போது தேர்தலுக்கான அறிவிப்பொன்று வௌிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நாம் இதுவரையில் எவ்விதமான தெரிவுகளையும் செய்யவில்லை. அந்த அறிவிப்பு வௌியிடப்பட்டதும் அது தொடர்பில் நாம் கூடிய ஆராய்வோம். அச்சந்தர்ப்பத்தில் அமைச்சருடைய கருத்து தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்துவோம் என்றார்.

முக்கிய குறிப்பு: சரத்பொன்சேகாவுக்கு  வாக்ளித்த  மக்கள் (மந்தைக்கூட்டங்கள்) கூட்டமைப்பு  கேட்டுக்கொண்டால்  வரும் தேர்தலில்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் வாக்களிக்க தயாராக இருப்பார்கள்.  கூட்டமைப்பினர்  எதற்கும்  கவலைப்பட தேவையில்லை.  யாருக்கு   மக்கள் காவடி  தூக்கவேண்டும் என்பதை  கூட்டமைப்பினர்தான்  முடிவெடுக்கவேண்டும்.

யாருக்கு  வாக்களிக்க  வேண்டுமமென்பதை    முடிவெடுத்து   வாக்களிக்க  கூடிய சுய அறிவு  மக்களிடம் உண்டா?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.