ஐ – 5000 கோடி சம்பாதிக்குமாம்…

0
286
தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் கம்பெனிக்கு போட்டுக் காட்டினாராம்.

அவற்றைப் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்களாம். அவர்களைப் போன்ற ஒரு பிரபலமான நிறுவனம் ஐ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டால் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தகுதி ஐ படத்திற்கு உண்டு என்கிறார்.இந்தியத் திரையுலகம் ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்குப் பின் என பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

“இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்திருக்கிறார்கள். உலகமே இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இயக்குனர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். இப்போதே அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்களை இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. அவர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.

ஐ படத்தை உலகில் உள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம், அதற்கான வலிமை படத்திற்கு உண்டு. ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

ஐ படத்திலும் ஷங்கரின் ஒரு நாள் பார்முலா!

முதல்வன் படத்தில் அர்ஜூனை ஒருநாள் முதல்வராக்கியவர் ஷங்கர். அதையடுத்து, இப்போது தான் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரே நாளில் விக்ரமை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கிறாராம்.

அதாவது, ஒரேநாளில் தன்னை பேரழகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கதையின் வில்லன் ஒரு மருந்தை கண்டு பிடித்து, அதை தனது உடம்பிலேயே செலுத்தி பரிசோதனை செய்து பார்ப்பாராம்.

ஆனால், அந்த மருந்து அவரை ஒரு கொடூரமான தோற்றத்துக்கு மாற்றி விடுமாம். இதனால் அந்த மருந்தில் இருந்த குறைபாடுகளை கண்டுபிடித்து அவற்றை நீக்கி அதை விக்ரம் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்வாராம்.

ஆனால், அவரோ, அந்த மருந்து உடம்பில் சென்றதும் மிக மிக அழகானவராக மாறிவிடுவாராம். அதோடு, அந்த அழகு காரணமாக ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் சென்று விடுவாராம் விக்ரம்.

ஆனால் அது சில மாதங்களிலேயே மாறி, அந்த மருந்தின் மோசமான பக்க விளைவுகளால் விக்ரமும் கொடூரமான தோற்றத்துக்கு மாறி விடுவாராம். அதையடுத்து, அந்த மருந்தினால் கொடிய மிருகங்களாக மாற்றப்பட்ட விக்ரமும், வில்லனும் அதன் பாதிப்பில் இருந்து எப்படி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள் என்பதுதான் ஐ படத்தின் முக்கிய கதையாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.