லொறி வீட்டின் மீது மோதி விபத்து: 2 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது

0
242

மொறவக்கவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிய பயணித்துக் கொண்டிருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து கொஸ்நில்கொட பகுதி வீடொன்றின் மீது மோதியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது வீட்டில் 2 வயது குழந்தையும் அவரது பாட்டியும் இருந்துள்ளனர். ( கடலுக்குச் சென்ற நால்வரில் இருவர் சடலமாக கரை திரும்பினர்)
மொறவக்கவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிய பயணித்துக் கொண்டிருந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து கொஸ்நில்கொட பகுதி வீடொன்றின் மீது மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது வீட்டில் 2 வயது குழந்தையும் அவரது பாட்டியும் இருந்துள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதியும் பாட்டியும் காயமடைந்து கொஸ்நில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைக்கு சிறு காயம் மாத்திரமே ஏற்பட்டு அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

விபத்தில் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் ஒன்றரை லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கடலுக்குச் சென்ற நால்வரில் இருவர் சடலமாக கரை திரும்பினர்
11-09-2014

மொரட்டுவ – கொரலவெல்ல பகுதியில் கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்று மாலை கடலுக்குச் சென்றுள்ளனர்.

பயணித்த மீன்பிடி படகின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட நால்வர் கரைக்கு நீந்திவந்த நிலையில் பாணந்துரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் பாணந்துரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் ஒருவர் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.