போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரி குடுநுவன் துபாயிலிருக்கும் காதலியிடம் தப்பிச் செல்ல முயற்சி : தப்பிச் செல்வதற்கு இரு அதிகாரிகள் உடந்தை!!

0
266

‘குடுநுவன்’ அல்லது திலான் என்றழைக்கப்படும் தேவகே துசித்த சாமா என்ற நபரின் காதலி டுபாயிலிருந்து அவரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கொழும்பு ஜாவத்த பகுதியில் 30,000 ரூபாவுக்கு சிகை அலங்காரம் செய்து வெளிநாட்டு  பிரஜை போன்று  வேடமிட்டு  மற்றுமொரு நபரின் பெயரில் கடவுச் சீட்டை பெற்றே இவர் டுபாய்க்கு தப்பிச் செல்ல எத்தனித்துள்ளார்..

போதைப்பொருள் வர்த்தகத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான ‘குடுநுவன்’ என்பவரை ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் செல்ல துணை புரிந்த சிறைச்சாலை அதிகாரியும் துபாய்க்கு தப்பிச் செல்வதற்கு உதவிபுரிந்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

‘குடுநுவன்’ அல்லது திலான் என்றழைக்கப்படும் தேவகே துசித்த சாமா என்ற நபரின் காதலி டுபாயிலிருந்து அவரை அழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதும் விசாரணைக ளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு ஜாவத்த பகுதியில் 30,000 ரூபாவுக்கு சிகை அலங்காரம் செய்து வெளிநாட்டு பிரஜை போன்று வேடமிட்டு மற்றுமொரு நபரின் பெயரில் கடவுச் சீட்டை பெற்றே இவர் டுபாய்க்கு தப்பிச் செல்ல எத்தனித்துள்ளார்..

506 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இவர் 6 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

பின்னர் சுகயீனம் காரணமாக ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அங்கிருந்து தப்பிச் சென்றார். இவர் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் செல்வதற்கு 20,000 ரூபா தருவதாக கூறியதால் சிறைச்சாலை அதிகாரி இவரை தப்பிச் செல்ல உதவி செய்துள்ளார். 20,000 ரூபாவில் முதற்கட்டமாக 4,500 ரூபாவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

தப்பிச் சென்ற குடுநுவன் அங்கொட பகுதி வீடொன்றில் முதலில் தங்கியிருந்து பின்னர் வெள்ளவத்தை பகுதியில் 75,000 ரூபா வாடகையில் தொடர்மாடி வீடொன்றில் தங்கியுள்ளார்.

ஜாவத்த பகுதியில் 30,000 ரூபாவுக்கு சிகையலங்காரம் செய்து தனது வழமையான தோற்றத்தை மாற்றி உறவினர் ஒருவரின் பிறப்பத்தாட்சி பத்திரத்தின் போட்டோ கொப்பியையும் சமர்ப்பித்து கடவுச் சீட்டொன்றை பெற்றுள்ளார்.

மூலப்பிரதிகள் இல்லாமல் போட்டோ கொப்பி பிரதிகளை மட்டும் வைத்து கடவுச் சீட்டை பெறுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவை தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவரின் பெயரில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதா அல்லது வேறு யாரதும் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நபர் ஒருவர் போன்று விமான நிலையத்தை வந்தடைந்த இவரை சீ.சீ.ரி.வி. கமராக்கள் மூலமும் நேரடியாகவும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

விமான நிலையத்தில் நின்ற அவருக்கு டுபாயிலிருந்து ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் அங்கேயே இருங்கள் ஒருவர் உங்களை அழைத்துச் செல்வார் என்று தெரிவுத்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பிட்டது போன்று குடிவரவு  குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் அவரை அழைத்துச் சென்று விமான நிலையத்தினுள் சகல பயண ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இதுவும் சீ.சீ.ரி.வி. கமராக்களில் பதிவாகி யுள்ளன. அத்துடன் குடிவரவு – குடியக ல்வு திணைக்களத்தின் 15 ஆவது கரும பீடத்துக்கு அழைத்துச் சென்று அந்த அதிகாரியே குடியகல்வு முத்திரையையும் இட்டு குடுநுவனை அனுப்பி வைத் துள்ளார்.

இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சந்தேகம் எழுந்ததும் விமானத்திற்குள் ஏறுவதற்கு முன்னதாக அவரை விசாரணைக்குட்படுத்தினர். இதன் போதே இவர் குடுநுவன் என்பது உறுதியாகியுள்ளது.

தனக்கு சகல பயண ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளருக்கு ஒரு இலட்ச ரூபாவை பணமாகவே உடனடியாக இவர் வழங்கியிருந்தார்.

இந்தப் பணத்துடன் குடிவரவு குடியகல்வு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்பத்தியிலிருந்து தப்பிச் செல்ல துணை புரிந்த உதவி சிறைச்சாலை அதிகாரியும் விமான குடிவரவு – குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தப்பிச் சென்ற ‘குடுநுவன்’ வெளிநாடு செல்வதற்கும், வெள்ளவத்தை அங்கொட வீடுகளில் தங்குவதற்கும் கடவுச் சீட்டு தயாரிப்பதற்கும் உதவி புரிந்தவர்கள் தொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரி வித்தார்.

கே. அசோக்குமார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.