உள்ளாடையுடன் சென்று பெண்ணை கட்டிப்பிடித்தவர் கைது

0
169

யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில்  தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழில், வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக  கிருஷ்ணாக் குழு கைது)
யாழ்ப்பாணம், கரவெட்டி, வதிரி ஆண்டாள் வளவுப் பகுதி வீடொன்றில்  தனித்திருந்த பெண்ணை, உள்ளாடையுடன் சென்று கட்டிப்பிடித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (14) மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியில், திருமணமான பெண்ணொருவர், அவரது கணவர் வெளிநாட்டு வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வருகின்றார். மேற்படி பெண்ணின் வீட்டிற்கு ஓரிரு வீடுகள் தள்ளி வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயது குடும்பஸ்தர், வியாழக்கிழமை (14) மதியம் பெண்ணின் வீட்டிற்கு உள்ளாடையுடன் சென்று மேற்படி பெண்ணைக் கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால், குறித்த பெண் கூக்குரலிடவே, சந்தேகநபர் தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து, அப்பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (14) மாலை முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிருஷ்ணாக் குழு கைது
15-08-2014
யாழில், வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும்  அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை (14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்ட போது, அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர்.

இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே  கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன.

துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில்  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு உருவாக்கப்பட்டு, தேடுல் பணி முடக்கி விடப்பட்டுள்ளது” என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கணவனைக் கொலை செய்தவனைக் காத்திருந்து கொன்ற கண்ணகி கைது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.