பிரபாகரன் மகன் பாலசந்திரனின் ‘புலிப்பார்வை’ !!

0
1782

ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம்.

ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது,

ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம்.

பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்குமுன் இலங்கை ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும்விதமாய் படத்திற்கு என பெயர் வைத்துள்ளோம்.

இதை படமாக எடுப்பதற்கு முன், இந்த கதையை சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடம் சொல்லி இதற்கு அனுமதி வாங்கினேன். இப்படத்தில் பாலச்சந்திரன் கதாபாத்திரத்தில் சத்யா என்ற சிறுவன் நடித்திருக்கிறார். நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

படத்தின் படப்பிடிப்பு கேரளாவிலும், ஒரு சில காட்சிகளை இலங்கையிலும் படமாக்கியுள்ளனர். இந்த படம் இந்தியாவுக்கு விடுதலை புலிகள் எதிரிகள் இல்லை என்பதையும்.

தமிழர்களின் வீரத்தையும் பதிவு செய்திருக்கிறோம். படத்தில் சினிமாவுக்கு தேவையான அத்தனை விஷயங்களும் இருக்கிறது. படத்திற்கு சென்சார் முடிந்து, யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர் என்றார்.

சிறுவன் சத்யா பேசும்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக எனது பள்ளிக்கு இயக்குனர் நேரில் வந்து என்னை தேர்வு செய்தார். என்னுடைய இன்னொரு சிறுவனையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.

அப்போது, பிரபாரகன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால் இந்த படத்தில் நாம் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தினேன். அது தற்போது  நிறைவேறியுள்ளது. அந்த கதாபாத்திரத்தை நான் நன்றாக செய்திருப்பதாக உணர்கிறேன் என்றான்.

இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பாடல்கள் எழுதி இசையமைக்கவும் செய்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனர் பாரிவேந்தர் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.மதன் இப்படத்தை தயாரித்து, வெளியிடுகிறார்.

“புலிப்பார்வை டைரக்டர் ராஷபக்ஷேவின் அடிவருடி” -நெடியவன் படையணி மாஸ்டர் பாய்ச்சல்!
26-07-2014

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் வரலாற்றை படமாக எடுப்பதாக கூறி, ஈழ ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்தை பெற்ற அப் படத்தின் டைரக்டர்  பிரவீன்காந்த், “ராஜபக்ஷேவின் அடியாள்” என்று போட்டுத் தாக்கியுள்ளார், வெளிநாட்டு விடுதலைப் புலிகள் குழுக்களில் ஒன்றான நெடியவன் படையணியின் செய்தித் தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர்.

“பாலச்சந்திரனின் வரலாற்றை சினிமாவாக எடுக்க போகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், பாலச்சந்திரன் துப்பாக்கியுடன் தோன்றுவது போன்ற காட்சிகளை படம்பிடித்து, பாலச்சந்திரனை ஒரு தீவிரவாதியாக காட்டப்பட்டுள்ளது அந்தப் படத்தில் என தெரியவருகிறது.

பாலகன் பாலச்சந்திரனுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி கொடுப்பது போலவும், பாலச்சந்திரன் எந்திரத் துப்பாக்கியை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவது போலவும் படத்தில் காட்சிகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது. அப்படியான போட்டோக்களும் எமக்கு கிடைத்துள்ளன.

இந்தப் படத்தின் சில காட்சிகள் இலங்கை அரசின் உதவியுடன் இலங்கையில் படமாக்கப்பட்டன எனவும், தெரியவருகிறது. இதிலிருந்து இந்தப் படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த், படத்தை தயாரித்த வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் ராஜபக்ஷேவின் அடிவருடிகளாக செயல்படுகிறார்கள் என தளபதி பிரிகேடியர் நெடியவன் கருதுகிறார்.

தற்போது மறைவிடத்தில் இருந்து படை திரட்டும் தலைவர் பிரபாகரனுடன், இது குறித்து தளபதி பேசியுள்ளார். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும்” என்றார் ஆவேசமாக.

பிரபாகரனுடன் பேசினாரா தளபதி? கில்லாடிதான் சார் அவர்!

பிரபாகரனை வைத்து  பிழைப்பு  நடத்தி  முடிந்து….  மகன்  பாலச்சந்திரனையும்   வைத்து பிழைப்பு  நடத்த  தொடங்கிவிட்டார்கள்..

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.