அனுஷ்காவுக்கு சுளுக்கு…

0
411

ருத்ரமாதேவி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடித்த போது நடிகை அனுஷ்காவின் காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. (படங்கள் )

ருத்ரமாதேவி திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியில் நடித்த போது நடிகை அனுஷ்காவின் காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு சரித்திரத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த இரு திரைப்படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன.

ருத்ரமாதேவியில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. ஏற்கெனவே யோகா டீச்சர் என்பதால், இதற்கான பயிற்சிகளை ஒரு மாதத்தில் கற்றுக்கொண்டாராம். தனித்தனி ஸ்டனடட் நடிகர்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

ருத்ரமாதேவி படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனுஷ்கா பங்கேற்ற வாள் சண்டைக் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. கொஞ்சம் கடினமான சண்டைக் காட்சி அது.

இதன்போதே அனுஷ்காவின் காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. மிகுந்த வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது ரெஸ்ட் எடுத்து வரும் அனுஷ்கா, தினமும் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறாராம்!

இதனால் ரஜினி, அஜீத் திரைப்படங்களில் நடிக்க அவர் கொடுத்த திகதிகள் தள்ளிப் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.