ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 4-வது வெற்றி ஐதராபாத்தை தோற்கடித்தது

0
384

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. இருபது20 கிரிக்கெட் போட்டியில் ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த 17ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர்  தவான்  தலைமையிலான  ஐதராபாத்  சன் ரைசர்ஸ்-டோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்தன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. இருபது 20 கிரிக்கெட்  போட்டியில் ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த 17ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான்  தலைமையிலான  ஐதராபாத் சன் ரைசர்ஸ்-டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்தன.


சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நமன் ஓஜாவுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா இடம் பெற்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச்,  ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். 3அவது ஓவரில் ல்பனாஸ் பந்து வீச்சில்   ஷிகர் தவான் (7 ஓட்டங்கள்), டேவிட் வோர்னர் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணியின் துடுப்பாட்ட நிலை குலைந்தது.

இதனை அடுத்து களம்   இறங்கிய லோகேஷ் ராகுல் 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ஓட்டங்களுடனும், வேணுகோபால் ராவ் 15 பந்துகளில் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். 16-வது ஓவரில் ஐதராபாத் அணி 100 ஓட்டங்களை கடந்தது. பொறுப்பை உணர்ந்து ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 44 ஓட்டங்களுடன் (45 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) மொகித்ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

கடைசி கட்டத்தில் டெரன் சமி, கரண் ஷர்மா ஆகியோர் அதிரடி காட்டியதால் ஐதராபாத் அணியின் ஓட்ட எண்ணிக்கை கௌரவமான நிலையை எட்டியது. 19-வது ஓவரில் கரண்ஷர்மா 2 சிக்சரும், கடைசி ஓவரில் டேரன்  சமி ஒரு சிக்சரும், முந்தைய ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தனர். கடைசி 2 ஓவர்களில் 32 ஓட்டங்களை சேர்த்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களை எடுத்தது. டேரன் சமி 23 ஓட்டங்களுடனும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கரண் ஷர்மா 17 ஓட்டங்களுடனும் (7 பந்துகளில் 2 சிக்சருடன்) களத்தில் இருந்தனர்.

சென்னை அணி தரப்பில் ல்பனாஸ், மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும், வெய்ன் சுமித் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் வெய்ன் சுமித் 66 ஓட்டங்களுடனும் (46 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன்), பிரன்டன் மெக்கல்லம் 40 ஓட்டங்களுடனும் (33 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

அடுத்து வந்த சுரேஷ்ரெய்னா (14 ஓட்டங்கள்), டுபிளிஸ்சிஸ் (0), ரவீந்திர ஜடேஜா (6 ஓட்டங்கள்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். டோனி 13 ஓட்டங்களுடனும், மிதுன் மன்ஹாஸ் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

டோனி பவுண்டரி அடித்து அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

5ஆவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 4ஆவது வெற்றி இதுவாகும். 4ஆவது ஆட்டத்தில் விளையாடிய ஐதராபாத் அணி கண்ட 3ஆவது தோல்வியாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.