30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது கதவை திறக்க முயற்சித்த பயணிகள். தீவிரவாதிகள் சதியா?

0
441

அமெரிக்க விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி இருவர்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (வீடியோ)
அமெரிக்க விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி இருவர்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(Terror: Travellers began screaming in terror when the man (pictured) approached the back of the plane and attempted to unlock the hatch-door)

நேற்று அமெரிக்காவில்  Southwest Airlines flight 722 என்ற விமானம் Chicago என்ற நகரில் இருந்து Sacramento என்ற நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது ஒரு பயணி தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து பாத்ரூம் சென்றார்.

அதன்பின்னர் திடீரென விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார். அவருக்கு இன்னொரு பயணியும் கதவை திறக்க உதவி செய்தார். இதை சகபயணி ஒருவர் பார்த்து விமானியிடம் கூறியதால் உடனடியாக இரு பயணிகளும் பிடிக்கப்பட்டனர். விமான கேப்டன் அவர்களிடம் விசாரணை செய்தார்.

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துள்ளார். தரையிறங்கியதும் கதவை திறக்க முயன்ற இரு பயணிகளும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்த விமானத்தில் 134 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் இருவரும் யர், எதற்காக கதவை திறக்க முற்பட்டனர். என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.