புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழா

0
446

யாழ்., தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையை இன்று (19) திறந்து வைத்தார்.  அத்துடன் புற்று நோய் புதிய சிகிச்சை கூடம் அமைப்பதற்கான அத்திவாரக் கல்லும் நடப்பட்டது.

மாத்தளை தொடக்கம் யாழ்.பருத்துறை வரையான நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், விஜயகலா மகேஸ்வரி, ஹர்ச டி சில்வா, எரான் விக்ரமசிங்க, ருவான் விஜேவர்த்தன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.