பெத்லஹேம் தேவாலயத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

0
343

பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (ஜனாதிபதிக்கு ‘பலஸ்தீனின் நட்சத்திரம்’ விருது – (படங்கள் இணைப்பு)
பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு ‘பலஸ்தீனின் நட்சத்திரம்’ விருது


பலஸ்தீனின் நட்சத்திரம்’ எனும் பலஸ்தீனின் அதியுயர் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்” என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷன’ விருதினை வழங்கிவைத்தார்.

பலஸ்தீனில் ஜனாதிபதி…

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பலஸ்தீன் சென்றடைந்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.