உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியா காந்தி

0
749

உலக  கோடீஸ்வர  தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக “Huffingtonpost” ஊடகம் தெரிவித்துள்ளது. உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார்.  இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  (படங்கள் இணைப்பு)

டெல்லி: உலக  கோடீஸ்வர  தலைவர்கள் வரிசை பட்டியலில் இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பின்னுக்கு தள்ளியிருப்பதாக “Huffingtonpost” ஊடகம் தெரிவித்துள்ளது.

உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத சோனியா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார்.

இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். அதுவும் சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் பட்டியலிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா அதிபர் புதின்

ரஷியா அதிபர் விளாடிமீர் புதினின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர். இவர்தான் கோடீஸ்வர தலைவர்களில் முதலிடமாம்

தாய்லாந்து மன்னருக்கு 2வது இடம்

30 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறா தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்.

புருனே சுல்தானுக்கு 3வது இடம்

20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் புருனே சுல்தான் ஹஸனல் பொல்கியா 3வது இடத்தில் இருக்கிறார்.

சவூதி அரேபியா அரசருக்கு 4வது இடம்

இந்த கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் 18 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ்க்கு 4வது இடம் கிடைத்திருக்கிறது.

5வது இடத்தில் அரபு எமிரேட்ஸ் அதிபர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் கலிபியா பின் ஜையத் அல் நஹ்யானின் சொத்து மதிப்பு 15 பில்லியன் டாலர். அவருக்கு 5வது இடம்.

துபையின் சேக் முகமது பின் ரஷீத்

துபை ஆட்சியாளர் சேக் முகமது பின் ரஷீத்தின் சொத்து மதிப்பு 14 பில்லியன் டாலர். அவருக்கு 6வது இடம்.

வடகொரியாவின் கிம் ஜோங் யுன்

வடகொரியா அதி-பர் கிம் ஜோங் யுன்னின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர். அவருக்கு 7வது இடம் கிடைத்திருக்கிறது.

Liechtenstein இளவரசர் ஹன்ஸ் ஆதம்-II

8வது இடத்தில் Liechtenstein இளவரசன் ஹன்ஸ் ஆதம் -II . இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்.

மொராக்கோ மன்னருக்கு 9வது இடம்

மொராக்கோ மன்னர் முகமதுவுக்கு 2.5 பில்லியன் டாலர் சொத்து. அவர் 9வது இடத்தில் இருக்கிறார்.

10வது இடத்தில் சிலி அதிபர்

சிலி நாட்டு அதிபர் செபஸ்டினுக்கு 2.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு. அவர் 10வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கத்தாரின் ஹமாத் பின் கலிபியா

கத்தார் ஆட்சியாளர் சேக் ஹமாத் பின் கலிபியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர். அவருக்கு 11 வது இடம் கிடைத்திருக்கிறது.

சோனியா காந்திக்கு 12வது இடம்

எந்த ஒரு அரசு பொறுப்பில் இல்லாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சொத்து மதிப்பு 2பில்லியன் டாலராம். அவருக்கு 12வது இடம்.

18வது இடத்தில் எலிசெபத்

இந்தப் பட்டியலில் 18வது இடம்தான் இங்கிலாந்து மகாராணிக்கு. அவரது சொத்து மதிப்பு 400 மில்லியன் முதல் 500 மில்லியன் டாலர்தானாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.