கூடி கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல்

0
287

யாழ். தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில், நேற்றிரவு கூடி கதைத்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்த மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டியுள்ளனர். (தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக்கொலை: யாழ். அரியாலை சம்பவம்)
யாழ். தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில், நேற்றிரவு கூடி கதைத்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்த மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் கூடி கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் சிலர் குறித்த இளைஞர்களை இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கின்றீர்கள் என கூறி சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவே மேலும் அப்பகுதிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மேலும் சிலரை தாக்கியுள்ளதுடன் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நான்கு இளைஞர்களும் ஜனாதிபதியின் பதாதைகளை கிழித்ததாக கூறி தெல்லிப்பளை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

நாகேஸ்வர ஸ்ரீ தர்சன் (வயது22) ரவீந்திரன் கஜீபன் (வயது21), முருகையா அசோக்குமார் (வயது35), அல்பிரட் பிரதீபன் (வயது30) ஆகியவர்களே இவ்வாறு தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக்கொலை

தாயின் இரண்டாவது கணவனால் அடித்து காயப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரைவயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிசில் டிலக்சன் என்னும் ஒன்றரைவயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவன் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது சந்தேக நபர் மதுபோதையிலிருந்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனடா அனுப்புவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
27-11-2013

மைச்சர் விமல் வீரவன்சவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறி கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இருவரை வாழைத்தோட்ட பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என்டன் கஜேந்திரன் என்பவரிடம் 6 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட முற்பட்ட போதே குறித்த இரு சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேரந்தவர் என்பதுடன் மற்றையவர் அங்குருவெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.

இந்நிலையில் அண்மைக்காலமாக அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள் என்ற போர்வையில் பண மோசடியில் ஈடுபம் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிகாட்டும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோகண, பதவி நிலைகளை கூறிக்கொண்டு பணம் மோசடியில் ஈடுபடுபவர் தொடர்பில் அவதான இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

*