பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் (பகுதி -2)

0
256

கேள்வி: ஜனாதிபதி பிரேமதாஸ எல்.ரீ.ரீ.ஈக்கு ஆயுதம் வழங்கியதை முதலில் வெளிப்படுத்தியவர் நீங்கள் அல்லவா…..

பதில்: ஜனாதிபதி பிரேமதாஸவை நான் நன்கறிவேன். ஏன் அப்படிச் செய்கறீர்கள் என அவரிடம் நான் கேட்டேன். இதைப்பற்றி நான் ரஞ்சன் விஜேரத்னவிடமும் பேசினேன். அவரும் இந்த நகர்வையிட்டு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தார், மற்றும் இதுபற்றி ஜனாதிபதி பிரேமதாஸவுடன் பேச்சு வார்த்தைகளையும் நடத்தினார். அதற்கான கட்டளையை ஜனாதிபதி பிரேமதாஸ தானே வழங்கினார் ,மற்றும் இராணுவம் அந்த வினியோகத்தை தயக்கத்துடன் மேற்கொண்டது. அந்த ஆயுதங்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஜனாதிபதி பிரேமதாஸ வழங்கிய சீமேந்தினைக் கொண்டுதான் எல்.ரீ.ரீ.ஈ ஒன்று நான்கு தளத்தை கட்டியது. ஜனாதிபதி பிரேமதாஸ அப்படிச் செய்தது இந்திய இராணுவத்தை திரும்ப அனுப்புவதற்காகவே. பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தை தாக்குவதை அவர் கையாள விரும்பினார். இந்திய இராணுவத்தின் இருப்பு நமது இறையாண்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அவர் நம்பினார். இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் என ஜனாதிபதி பிரேமதாஸ நினைத்தார், ஆனால் ஜே.ஆர் அப்படி நினைக்கவில்லை. நானும் பின்னவரின் கருத்தையே கொண்டிருந்தேன்.

கேள்வி: உங்கள் புத்தகமான ஸ்ரீலங்காவில் இந்தியாவின் தலையீடு என்பதில் றோ பற்றிய ஏராளமான தகவல்களை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். எப்படி நீங்கள் றோ பற்றி அவ்வளவு தகவல்களை அறிந்தீர்கள்?

பதில்: றோவின் ஆரம்பகர்த்தாவான ஆர்.என் காஓவை அவரது புதுதில்லி இல்லத்தில் வைத்து சந்தித்தேன். எல்.ரீ.ரீ.ஈ மற்றும் வடக்கிலுள்ள இதர கிளர்ச்சி இயக்கங்களுக்கு தாங்கள் பயிற்சி வழங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். அவருடனான எனது நேர்காணல் எனது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எல்.ரீ.ரீ.ஈயின் ஏனைய தலைவர்களுடனும் நான் பேசினேன்.

எல்.ரீ.ரீ.ஈ, ரெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புகளும் தங்களுடன் பயிற்சி பெற்றதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பனிப்போர் சமயத்தில் இந்தியா சோவியத் ர~;யாவி;ன் பக்கமிருந்ததாகவும் மற்றும் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் பக்கம் நின்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தியாவை நிலையற்றதாக்க அமெரிக்கா ஸ்ரீலங்காவை கையாளுவதாக அவர்கள் சொன்னார்கள். இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சண்டையிட்டுள்ளது.

இந்தியா தனது அணுவாயுத வசதிகள் அனைத்தையும் தென்னிந்தியாவுக்கு நகர்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஸ்ரீலங்காவில் ஒரு தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் மற்றும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளும் அதனிடம் வழங்கப்படும் என அவர்கள் நினைத்தார்கள்.

மேலும் வொய்ஸ் ஒப் அமெரிக்கா, அமெரிக்க நிகழ்ச்சிகளை மட்டும் ஒலிபரப்பவில்லை, ஆனால் இந்தியாவின் தொடர்பாடல்களையும் ஒட்டுக்கேட்பதாகவும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது ஒரு தவறான புரிதல். ஸ்ரீலங்காவில் இஸ்ராயேல் அதிகாரிகள் இருப்பதையும் றோ சந்தேகித்தது. ஒருமுறை ஜே.ஆர். ஜெயவர்தன ஒரு அற்புதமான கதையை என்னிடம் சொன்னார்.

கேள்வி: அது என்ன?

பதில்: அப்போது இஸ்ராயேலுக்கு ஸ்ரீலங்காவில் தூதரகம் இருக்கவில்லை. ஒரு ஸ்தானிகரலாயம் மட்டுமே இருந்தது. ஜே.ஆருடனான ஒரு பேச்சு வார்த்தையின்போது இந்திய பிரதமர் இந்திரா காந்தி அதை மூடிவிடும்படி கேட்டுக்கொண்டார். ஜே.ஆர். அதற்கு பதிலளிக்கையில் தான் அதை மூடிவிடுவதாகவும், ஆனால் அதற்கு முன்னால் மும்பையில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை இந்தியா மூடவேண்டியது அவசியம் என்றார்.

இந்தியாவில் யூதர்கள் உள்ளதால் தன்னால் அதை செய்ய முடியாது என்று இந்திரா சொன்னார். இந்தியா ஸ்ரீலங்காவை கட்டாயப்படுத்த முயற்சித்தது. தனது வெளியுறவுக் கொள்கைகளுக்கு பொருத்தமாக அமெரிக்கா தன்னைச் சுற்றி இருக்கவேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால் இந்தியா மூடிய பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ள அதேவேளை நாங்கள் திறந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளோம் .1977ல் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை திறந்து விட்டோம், ஆனால் அதேவேளை இந்தியா அதை 1990லியே செய்தது.

கேள்வி: நீங்கள் றோவின் இரகசியங்களை அம்பலப்படுத்தி இருப்பதால் இந்தியா உங்கள்மீது கோபப்படவில்லையா?

பதில்: இந்தியா ஆரம்பத்தில் கோபமாகத்தான் இருந்தது. ஆனால் நான் உண்மையைத்தானே வெளிப்படுத்தினேன் மற்றும் எனது புத்தகத்தில் முதல்நிலைத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. நான் தவறு செய்திருந்தால் அவர்கள் என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கலாம், ஆனால் நான் செய்தது சரியானபடியால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

கேள்வி: ஜே.ஆர். ஓய்வு பெற்ற பிறகும்கூட நீங்கள் அவருக்காக பணியாற்றினீர்களா?

பதில்: ஆம், நான் அவருடன் பணியாற்றினேன். ஜே.ஆர் இந்திரா காந்தி மீது சினம் கொண்டிருந்தாலும் ராஜீவை மிகவும் விரும்பினார். அவர் ஒருமுறை, இந்திரா எங்கள் நாட்டை பேரழிவிற்கு உள்ளாக்கி விட்டார் என்று சொன்னார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அவரால்தான் இந்த நாட்டில் பயங்கரவாதம் பலமடைந்தது என்று அவர் சொன்னார். அவர் சொன்னது சரி. இந்தியா, எல்.ரீ.ரீ.ஈக்கு ஆயுதங்களை வழங்கி அங்கு பிரச்சாரத்துக்கான ஒரு காட்சியை அமைத்துக் கொடுத்தது. ஒரு அரசாங்கம் பின்துணை வழங்கும்போது, ஒரு பயங்கரவாத இயக்கம் அளவுக்கு மீறிப் பலம் பெறுகிறது.


கேள்வி: ஜனாதிபதி பிரேமதாஸ எல்.ரீ.ரீ.ஈக்கு ஆயுதம் வழங்கியதை முதலில் வெளிப்படுத்தியவர் நீங்கள் அல்லவா…..

பதில்: ஜனாதிபதி பிரேமதாஸவை நான் நன்கறிவேன். ஏன் அப்படிச் செய்கறீர்கள் என அவரிடம் நான் கேட்டேன். இதைப்பற்றி நான் ரஞ்சன் விஜேரத்னவிடமும் பேசினேன். அவரும் இந்த நகர்வையிட்டு மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தார், மற்றும் இதுபற்றி ஜனாதிபதி பிரேமதாஸவுடன் பேச்சு வார்த்தைகளையும் நடத்தினார். அதற்கான கட்டளையை ஜனாதிபதி பிரேமதாஸ தானே வழங்கினார் ,மற்றும் இராணுவம் அந்த வினியோகத்தை தயக்கத்துடன் மேற்கொண்டது. அந்த ஆயுதங்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஜனாதிபதி பிரேமதாஸ வழங்கிய சீமேந்தினைக் கொண்டுதான் எல்.ரீ.ரீ.ஈ ஒன்று நான்கு தளத்தை கட்டியது.

ஜனாதிபதி பிரேமதாஸ அப்படிச் செய்தது இந்திய இராணுவத்தை திரும்ப அனுப்புவதற்காகவே. பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தை தாக்குவதை அவர் கையாள விரும்பினார். இந்திய இராணுவத்தின் இருப்பு நமது இறையாண்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அவர் நம்பினார். இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் என ஜனாதிபதி பிரேமதாஸ நினைத்தார், ஆனால் ஜே.ஆர் அப்படி நினைக்கவில்லை. நானும் பின்னவரின் கருத்தையே கொண்டிருந்தேன்.

இந்திய இராணுவத்தை காட்டிலும் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் அச்சுறுத்தலானது என நாங்கள் நம்பினோம். எல்.ரீ.ரீ.ஈயுடான போரில் இந்திய இராணுவம் தோற்றது. அமெரிக்க இராணுவம் வியட்னாமில் தோற்கடிக்கப்பட்டதைபோல அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 1,555 இந்திய வீரர்கள் உயிரிழந்த அதேவேளை 2,984 பேர்கள் அங்கவீனர்களானார்கள்.

கேள்வி: பிரபாகரனை கொல்வதற்கு இந்திய இராணுவம் தவறிவிட்டதா அல்லது வேண்டுமென்றே அவரை விட்டுவிட்டார்களா?

பதில்: பிரபாகரனை கொல்லவேண்டாம் என்று இந்திய இராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு பொய். அவர்கள் பிரபாகரனை கொல்ல விரும்பினார்கள் ஆனால் அப்படிச் செய்யத் தவறிவிட்டார்கள். இந்திய இராணுவத்துக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் உள்ளன.

இந்திய இராணுவம் பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. கடந்த 10 வருடங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உயர்ந்த பட்சம் அவ்வாறான 10 சம்பவங்களோடு தொடர்புபட்டிருந்தார்கள். ஆனால் இந்திய இராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்களில் தொடர்புபட்டிருந்தது. இந்திய இராணுவத்தினர் உணவு உட்கொள்ளும் காட்சியை நான் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு ஒரு கையில் ஒரு சப்பாத்தியும் மறுகையில் கறியும் பரிமாறப்படும். அவர்கள் அப்படித்தான் உண்டார்கள். ஸ்ரீலங்கா வீரர்கள் எப்போதாவது அப்படி உண்டிருக்கிறார்களா?

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈயுடன் ஜனாதிபதி பிரேமதாஸ செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன?

பதில்: பிரேமதாஸ, பிரபாகரன் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவை விட்டு விரட்டுவதே அவர்கள் இருவரதும் இலட்சியமாக இருந்தது. இருந்தும் இந்திய இராணுவம் திரும்பிச் சென்றது பிரபாகரனை பலப்படுத்தியது,மற்றும் தன்னால் இனி ஈழத்தை கட்டியெழுப்பலாம் என்கிற கற்பனையில் அவர் இருந்தார்.

உலகிலேயே நாலாவது பெரிய இந்திய இராணுவத்துடன் அவர் போரிட்டுள்ளார். இந்தியா உற்பத்தியாக்கிய திறமையான தலைவரான ராஜீவை, எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்தது. அவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்தவர்கள் அவர் செய்ததைபோல மற்றொரு நாட்டின்மீது ஆக்கிரமிப்பு செய்ய ஒருபோதும் துணியவில்லை. அந்தக் கருத்தில் பார்க்கும்போது பிரபாகரன் செய்தது சரி. ராஜீவுக்கு பிறகு வந்த தலைவர்கள் அவைரும் பலவீனமான எண்ணமுடையவர்களாகவே இருந்தார்கள்.

கேள்வி: ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பிரபாகரன் மற்றொரு நாட்டின் செல்வாக்குக்கு கீழ்பட்டிருந்தாரா?

பதில்: இல்லை, இல்லை. அப்படியான எதுவும் இல்லை. ராஜீவை கொலை செய்தபின்பு அவர்கள் பிரேமதாஸவையும் கொன்றார்கள், அவர்களுக்கு ஆயுதம் வழங்கியதற்கான விலையை அவர் பெற்றுக்கொண்டார்.

கேள்வி: பிரபாகரன் ஏன் பிரேமதாஸவை கொன்றார், எல்.ரீ.ரீ.ஈக்கு அவ்வளவு உதவி செய்தது யார்?

பதில்: இந்திய இராணுவம் திருப்பி அழைக்கப்பட்ட பின்பு பிரபாகரன், பிரேமதாஸவை கொல்வதற்கு சபதம் எடுத்து அதன்படி செய்து முடித்தார். கொலை நடந்ததின் பின்னர் சுசரித்த இல்லத்தில் இருந்த பிரேமதாஸவின் அறைக்கு நான் சென்றிருந்தேன். அவரது மேசைக்கு மேல் நான்கு ஜாதகங்கள் இருந்தன. அவை பிரேமதாஸ, பிரபாகரன், காமினி திசாநாயக்க மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோருடையவை. பாஸ்கரலிங்கம் இந்தியாவுக்கு கொண்டுபோய் அவைகளின் பலன்களை அறிந்து வந்திருந்தார்.

கேள்வி: இந்த நாலு ஜாதகங்களையும் படித்த பின்புதானா பிரேமதாஸ வெளியேறியிருந்தார்.

பதில்: ஏப்ரல் 30 ந்திகதி அன்று அப்போது புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்த செரினி விஜேசூரிய, பிரேமதாஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமான தனது முகவர்களில் ஒருவரை அடுத்த நாள் கூட்டத்துக்கு சமூகமளிக்காது இருக்கும்படி அவரிடம் சொல்லும்படி அனுப்பியிருந்தார். அவருடைய பெயரை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இன்னமும் சேவையில் இருக்கிறார். ஸ்ரீலங்காவில் புலனாய்வு தளத்தை கட்டியெழுப்பிய திறமையான தலைவர் செரினி. பிரேமதாஸ ஒரு இக்கட்டான நிலையில் இருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ, லலித் அத்துலத் முதலியை கொலை செய்திருந்தது. கொலையாளியான அப்பையா பாலகிருஸ்ணன் எல்.ரீ.ரீ.ஈ, லெபனானில் இருந்து பெற்ற ஒரு ஆயுதத்தை கொலைக்காக பயன்படுத்தியிருந்தான். பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினரிடம் அது பற்றிய தகவல்கள் இருந்தன. அவர்கள் அதை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்கள். சிலர் குற்றம் சாட்டுவதைப்போல லலித் அத்துலத் முதலி ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் கொல்லப்படவில்லை எல்.ரீ.ரீ.ஈ தான் அவரைக் கொன்றது என்பதை பிரித்தானிய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால் அந்த அறிக்கை பிரேமதாஸவின் கொலைக்குப் பின்பே வெளிவந்தது. தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளினால் ஜனாதிபதி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். என்னைக் கொல்லுங்கள் ஆனால் எனது குணாதிசயத்தை கொல்லாதீர்கள் என அவர் மக்களை கேட்டிருந்தார்.

லலித் உடனடியாகவே துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இரையாகிவிடவில்லை. முன்னாள் படை வீரரான அவரது மெய்ப்பாதுகாவலர் கொலையாளியை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். காயங்களுக்கு இலக்கான கொலையாளி பாலகிருஸ்ணன் முகலன் வீதி வழியாக ஓடி சயனைட்டை உட்கொண்டார். ஆனால் மக்கள் லலித் அத்துலத் முதலியை கொன்றது பிரேமதாஸதான் எனக் குற்றம் சாட்டினார்கள்.

கேள்வி: காமினி திசாநாயக்காவுடன் உங்களுக்கு எந்த வகையான உறவு இருந்தது?

பதில்: நான் அவருக்கு நெருக்கமாக இருந்ததில்லை. நான் அவரை பல தடவைகள் சந்தித்ததுண்டு. அவருடன் எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது.

கேள்வி: அது என்ன?

பதில்: எனது ஒரு நண்பரான பேராசிரியர் ரால்ப் புல்ட்ஜன்ஸ் அவர்களை கடத்தியதாக காமினி திசாநாயக்க மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. நான், பேராசிரியர் பொன்னம்பெருமா அவர்களுடன் புல்ட்ஜன்ஸ் அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்தேன், அப்போது அவரது வேலையாள் பேராசிரியரை ஒரு கும்பல் தூக்கிச் சென்றதாக எங்களிடம் சொன்னான். அதை யார் செய்திருப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நேரடியாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவை சந்தித்தோம்.

காமினி திசாநாயக்கா பண மோசடி செய்கிறார் என்று புல்ட்ஜன்ஸ் தனது விரிவுரைகளின்போது குற்றம் சாட்டியிருந்ததால் காமினி திசாநாயக்கவும் எங்களைபோல ஜே.ஆரை சந்தித்திருந்தார். அது உண்மையா அல்லது இல்லையா என்று எனக்கு தெரியாது. எனினும் இதன் காரணமாக காமினி மிகவும் கோபமடைந்திருந்தார். புல்ட்ஜன்ஸ் அவர்களை கடத்துவதற்காக காமினி ஒராளை வாடகைக்கு அமர்த்தியதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் நல்லவேளையாக அவருக்கு எந்த கெடுதலும் நேரவில்லை. காமினி திசாநாயக்காவிடம் தொலைபேசியூடாக புல்ட்ஜன்ஸை அவர் கடத்தியிருப்பதை நாங்கள் அறிவோம் பேராசிரியர் விடுதலை செய்யப்படாவிட்டால் உங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்னோம். திசாநாயக்கா பின்னர் புல்ட்ஜன்ஸை விடுவித்துவிட்டார்.

கேள்வி: தான் எல்.ரீ.ரீ.ஈயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை காமினி திசாநாயக்கா அறிந்திருந்தாரா?

பதில்: ஆம். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் அச்சுறுத்தலின் கீழ் இருப்பதை நான் அவரிடம் சொல்லியிருந்தேன். இதேபோல ஜானக பெரேரா மரணமடைவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவரிடமும் அதைப்பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ தன்னை கொல்லும் என ஜானக எதிர்பார்க்கவில்லை. எல்.ரீ.ரீ.ஈ அதைச் செய்தது. வேறு எந்த நாட்டிலும் இத்தனை அதிக அளவிலான தலைவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது இல்லை.

கேள்வி: ஜனாதிபதி பிரேமதாஸ இந்திய இராணுவத்தை எப்படி திருப்பி அனுப்பினார்?

பதில்: அவர் இந்திய இரணுவத்தினரை ஆக்கிரமிப்பாளர்கள் எனச் சொன்னார். அதன் பின் அவர்கள் போய்விட்டார்கள். எல்லா இந்தியத் தூதுவர்களுமே பொய்யர்கள். ஒருமுறை ஒரு கூட்டத்தில் நான் ஜே.ஆருடன் வைத்து டிக்சிற்றை சந்தித்தேன். ரவி ஜெயவர்தனாவும் எனக்கு எதிரே அமர்ந்திருந்தார். அப்போது ஜே.ஆர். இந்தியா கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதாக சொன்னார், டிக்சிற் தனது கைகளை வீசி அதனை நிராகரித்தார். அதனால் ரவி கோபமடைந்தார். அவர் திடீரென ஒரு கிறனைட்டை எடுத்து மேசைமேல் வைத்தார். டிக்சிற் அச்சமடைந்தார். இந்த கிரனைட் இந்தியாவின் கோயம்புத்தூரில் செய்யப்பட்டது என ரவி சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்காவில் தோன்றியது ஆனால் அதன் தாக்கத்தை அது இந்தியாவிலேயே சேர்த்துக் கொண்டது.

கேள்வி: சந்திரிகா எல்.ரீ.ரீ.ஈ பற்றி உங்களது ஆலோசனையை நாடினாரா?

பதில்: அவர் பிரதம மந்திரியாக பதவியேற்ற முதல் நாளே நான் அவசை; சந்தித்தேன். எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தை முடித்துவிடும்படி அவரிடம் நான் கேட்டுக் கொண்டேன், ஆனால் தான் அவர்களுடன் பேச விரும்புவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் அப்படிச் சொன்னபோது வேறு யார் அங்கிருந்தார்கள்?

பதில்: அங்கு சுனிமல் பெனாண்டோ மற்றும் லயனல் பல்லேகல ஆகியோர் அங்கிருந்தனர். சந்திரிகா பல்லேகலவிடம் எல்.ரீ.ரீ.ஈ பற்றி கேட்டார். அவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் தனது ஒரு கண்ணை இழந்த பின்பு,அவரை நான் திரும்பவும் சந்தித்தேன் அப்போது அவர் எல்.ரீ.ரீ.ஈ யினர் முரடர்கள் எனச் சொன்னார்.

கேள்வி: நீங்கள் அனுருந்த ரத்வத்தவை சந்தித்ததுண்டா?

பதில்:
ரூப் ஒக்ஸ்மான் என்கிற அமெரிக்க பயங்கரவாத நிபுணருடன் சேர்ந்து அவரை நான் சந்தித்தேன். ஜெயசிக்குரு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் அவரிடம் தெரிவித்தோம். எல்.ரீ.ரீ.ஈ. ஏ-9 பாதை வழியாக தாக்குதல் நடத்தும் என்று நாங்கள் அவருக்கு சுட்டிக் காட்டினோம். தன்னிடம் 10,500 வீரர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு மாதத்துக்குள்ளாகவே அந்த நடவடிக்கை தோல்வி கண்டது.

கேள்வி: கோட்டபாய ராஜபக்ஸவை முதன்முதலாக எப்போது சந்தித்தீர்கள்.

பதில்: அவரை நான் முதலில் சந்தித்தபோது அவர் இராணுவத்தில் ஒரு கேணலாக இருந்தார். அவர் ஒரு திறமையான அதிகாரி. யுத்தத்தை அந்த வழியில் நடத்தக்கூடாது, மற்றும் அரச தலைவர்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அவர் சொன்னார். அப்போது அவரது தலைவராக பிரிகேடியர் விஜய விமலரத்ன இருந்தார். கோட்டபாய மற்றும் ரஞ்சன் விஜேரத்ன ஆகிய இருவருமே திறமையான தலைவர்கள். அவர்கள் இரண்டு யுத்தங்களை முடித்து வைத்தார்கள். ரஞ்சன் ஜேவிபி பயங்கரவாதத்தை தோற்கடித்த அதேவேளை கோட்டபாய எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை தோற்கடித்தார். எல்.ரீ.ரீ.ஈ, ரஞ்சனை கொலை செய்தது ஏனென்றால் அவர் உயிரோடிருந்தால் பிரபாகரன் உயிர்வாழ முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

கேள்வி: யுத்தம் முடிவடைந்த பின்பு நீங்கள் பிரபாகரனின் பெற்றோர்களை சந்தித்தீர்களா?

பதில்: ஆம். நான் அவர்கள் இருவரையும் சந்தித்து பேசியிருந்தேன். அவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டார்கள். தனது மகனின் அரசியலுக்கு தான் எதிரானவர் என பிரபாகரனின் தந்தை என்னிடம் சொன்னார். அவர் ஒரு காணி அதிகாரியாக இருந்தவர் மற்றும் தனது மரணம் வரை தனது ஓய்வூதியத்திலேயே தங்கியிருந்தார்.

கேள்வி: தனது தந்தையை கடைசியாகச் சந்தித்தபோது பிரபாகரன் அவரிடம் என்ன சொல்லியிருந்தார்?

பதில்: பிரபாகரனின் தந்தை கரவ முள்ளிவாய்க்காலில் வாழ்ந்தவர். பிரபாகரனை சந்திப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ அவரை நந்திக் கடலுக்கு அழைத்துச் சென்றார்கள். அதுதான் அவர்களது கடைசி சந்திப்பு. அடுத்து என்ன செய்வது என்று தந்தை மகனிடம் கேட்டார். அதற்கு பிரபாகரன் விவாதிப்பதற்கு இது நேரமல்ல ஆனால் முன்னேற வேண்டியதுதான் என்று பதிலளித்தாராம். இதைக் கேட்டதும் எனக்கு ஹிட்லரின் ஞாபகம் வந்தது. அது ஹிட்லரின் மனப்போக்காக இருந்தது. தேவைகளுக்கு ஏற்றபடி மூலோபாயங்களை மாற்றிக்கொண்டு தங்கள் கட்டமைப்புக்கு வெளியே அடியெடுத்து வைக்க அவர்கள் விரும்பியதில்லை.

அவர்களது நடத்தையை கொண்டு பார்க்கையில் பிரபாகரன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் இரண்டு வேறுபட்ட உலகை சேர்ந்தவர்களாகத் தோன்றினார்கள். பிரபாகரன் அவரது தாயின் குணத்தையே மரபுவழியாக பெற்றிருக்க வேண்டும். அவரது தாய் ஒரு கடினமான பெண்மணி. அவர் தனது கணவரைக்கூட அடிப்பாராம். யுத்தத்திற்கு பிறகு,இரவு நேரங்களில் அவர் பிரபா, பிரபா,என்று கதறுவாராம், மற்றும் அவரது கணவர் அவரை தடுத்து நிறுத்த முயன்றால் தனது கைக்கு கிடைக்கும் எதையாவது கொண்டு அவரை அடிப்பாராம்.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ உங்கள்மீது வழக்கு தொடர்ந்தார்களாம் இல்லையா?

பதில்: கனடாவில் உள்ள ஒரு எல்.ரீ.ரீ.ஈ முன்னணி நிறுவனம் என்மீது வழக்கு தொடரப் போவதாக அச்சுறுத்தியது, ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்களுக்கு முகம் கொடுக்க எனக்கு பயம் ஒன்றும் கிடையாது. கனடிய தமிழர் அமைப்பு எல்.ரீ.ரீ.ஈ யின் ஒரு பிரதிநிதி என்று நான் சொல்லியிருந்தேன். இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் இப்போது அமெரிக்க சிறையில் உள்ளார். பொட்டு அம்மானுக்காக ஆயுதங்களை கடத்த முயன்றபோது அவர் பிடிபட்டுள்ளார்.

கேள்வி: கேபி உங்கள் நல்ல நண்பர்களில் ஒருவரா?

பதில்: ஆம்.

கேள்வி: அவரை ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கையில் நீங்களும் ஒரு கட்சியாக இருந்தீர்கள் இல்லையா?

பதில்: இல்லை. அவர் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அவரை நான் சந்தித்தேன். மணிக்கணக்காக நான் அவருடன் பேசினேன். ஸ்ரீலங்கா அரசாங்கம் அவரை சிறையில் அடைக்காமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏற்ற ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்தப் பணியை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.

கேள்வி: பொட்டு அம்மான் உயிரோடிருப்பதை பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் பொட்டுவின் மகன் காயங்களுக்கு உள்ளானார். அப்பொழுது பொட்டுவின் மனைவி அவருக்கு அருகிலிருந்தார். தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்து அவர் சயனைட் அருந்தியுள்ளார். உடனடியாக அவர் சாகவில்லை. அவர் செத்துக் கொண்டிருந்தார், அதனால் பொட்டு அம்மான் அவரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை புரிந்து கொண்டார்.

கேள்வி: ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளுடன் உங்களுக்கு என்ன உறவு உள்ளது?

பதில்: நான் பயங்கரவாதத்துக்கு எதிரானவன். எந்த நாடும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க நான் உதவி செய்வேன். ஸ்ரீலங்காவில் அதை நான் ஜே.ஆர் ஜெயவர்தன காலம் தொட்டே செய்து வருகிறேன். அரசாங்கங்களின் தன்மை எனக்கு முக்கியமானதல்ல. நான் எனது கடமையை அரசாங்கத்துக்கு செய்கிறேன். 1995 முதல் நான் ஒரு வெளிநாட்டில் வேலை செய்து வந்தாலும், நான் இந்த நாட்டின் ஒரு குடிமகன்.நான் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டையே வைத்திருக்கிறேன். எந்த மேற்கத்தைய நாட்டின் குடியுரிமையையும் என்னால் பெறமுடியும். ஆனால் நான் ஸ்ரீலங்காவை நேசித்து வருவதால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்


பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார் (பகுதி 1)

தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் இருப்பிடம் பற்றிய சந்தேகங்களுக்கு சர்வதேச பயங்கரவாத நிபுணரான பேராசிரியர் றோகான் குணரட்ன, பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார் அவருடனான நேர்காணல்….

கேள்வி: நீங்கள் பிரபாகரனின் சமையல்காரரையும் சந்தித்தீர்களா?

பதில்: ஆம், அவர் சமையல்காரனாகவும் அதேசமயம் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு தலைவராகவும் இருந்தார். நான் பிரபாகரனின் மருத்துவரையும்கூட சந்தித்தேன். இந்த நபர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு கற்பனா இன்பம் இருப்பதை நான் அறிந்துகொண்டேன். அவரது கற்பனை அவர் பற்றார்வமுள்ள விசிறியாக இருந்த ஹாலிவூட் திரைப்படங்களை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. அவர் ஹாலிவூட் படங்களைப் பார்த்து தனது ஓய்வு நேரத்தில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுத்து வந்தார். ஹாலிவூட் திரைப்படங்கள் அவருக்கு அறிவுவழங்கும் ஒரு வளமாக இருந்தன. பிரபாகரனுக்கு பிடித்தமான உணவு இந்திய சீன சமையல்கள் மற்றும் ஐஸ் கிறீம் என அவரது சமையல்காரர் தெரிவித்தார்.மேலும் தனது சொந்த உணவை தன்கையாலே சமைப்பதை அவர் மிகவும் விரும்பினார்.

கேள்வி: அவரது மருத்துவர் என்ன சொன்னார்?

பதில்: பிரபாகரன் அவரது நாசியில் உள்ள விழுதை நீக்க ஒரு சிறிய அறுவை சிகிச்சை மட்டும் செய்துகொள்ள வேண்டும், என அவர் சொன்னார். புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனையில் அது நடத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் இருப்பிடம் பற்றிய சந்தேகங்களுக்கு சர்வதேச பயங்கரவாத நிபுணரான பேராசிரியர் றோகான் குணரட்ன, பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார் அவருடனான நேர்காணலில் இருந்து சில எடுத்தாள்கைகள்:

கேள்வி: நீங்கள் அறிய நேர்ந்த முதலாவது அரசியல்வாதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களா?

பதில்: நான் பேராசிரியர். பொன்னம்பெருமாவுடன் சேர்ந்து அவரைக் காணச் சென்றிருந்தேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலமைகள் பற்றி அவர் சுருக்கமான விபரங்களைக் கேட்டிரு;தார். நான் அதைச் செய்து கொடுத்தேன், மேலும் நான் 1987ல் பிரபாகரனைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு கூடச் சென்றிருக்கிறேன்

கேள்வி: அது எப்படி நடந்தது?

பதில்: நான் யாழ்ப்பாணத்துக்கு ஜூலையில் சென்றிருந்தேன், ஆனால் பிரபாகரனை ஆகஸ்ட் 4ம் திகதியே சந்தித்தேன். அப்போது நான் பயன்படுத்தி வந்த சிறிய புகைப்படக் கருவியினால் நான் பிரபாகரனை ஒரு புகைப்படம் எடுத்திருந்தேன். நான் எழுதிய ஸ்ரீலங்காவில் யுத்தமும் சமாதானமும் என்கிற புத்தகத்தில் அந்தப் புகைப்படத்தை பிரசுரமும் செய்திருந்தேன். அது என்னுடைய முதலாவது புத்தகம் அல்ல. நான் ஏற்கனவே ஸ்ரீலங்காவுடனான சீனாவின் உறவுகள் பற்றி சீன லங்கா தொடர்புகள் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளேன்.

ஜனாதிபதி ஜெயவர்தனவி;ன் வேண்டுகோளுக்கு அமைய அதை நான் எழுதியிருந்தேன். ஆகஸ்ட் 1983 முதல் 1987 ஜூன் வரை இந்திய புலனாய்வுச் சேவையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் (றோ), ஸ்ரீலங்காவில் இருந்த பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தார்கள்.

எல்.ரீ.ரீ.ஈக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்காக இந்தியாவில் ஒரு இராணுவ தளம்கூட வழங்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசத்தின் டெஹ்ராடன்னில் அமைந்துள்ள வக்ராத்தாவில் எல்.ரீ.ரீ.ஈயின் முதல் தொகுதியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாவது தொகுதியினர் ஹிமாச்சாலில் பயிற்சி பெற்றார்கள். மேலும் எட்டு அணியினருக்கும் தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தன. இந்தியாவின் நெருக்கமான உறவுகள் சோவியத் ருஷ்;யாவுடனேயே இருந்து வந்தன. ஸ்ரீலங்கா தனது தொடர்புகளை அமெரிக்கா, ஐரோப்பா,பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே பேணி வந்தது.

ஸ்ரீலங்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையேயுள்ள உறவுகளை ஆராயும்படி ஜனாதிபதி ஜெயவர்தன என்னைக் கேட்டுக்கொண்டார்;. அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் சீன லங்கா தொடர்புகள் என்கிற புத்தகம். பின்னர் ஒரு சமயம் சீனப் பிரதமர் லீ சியாங் யாங் தனது மனைவியுடன் ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது கொழும்பு மேயராக இருந்த சிறிசேன குரே அவர்களின் முன்னிலையில் வைத்து எனது ஆராய்ச்சியை அவருக்கு பரிசளித்தேன்.

கேள்வி: அந்தச் சந்திப்பில் பிரபாகரன் உங்களிடம் என்ன சொன்னார்?

பதில்: இந்நேரம்வரை வெளியே தெரியாத ஒரு இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவுடன் சண்டையிடுமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி ஜெயவர்தன அறிய விரும்பியதாலேயே நான் யாழ்ப்பாணம் சென்றேன். அதைப்பற்றி நான் ஆராய விரும்புகிறேன் என்று அவரிடம் நான் தெரிவித்தேன். யாழ்ப்பாணத்தில் பிரபாகரனுடன் நான் கலந்துரையாடினேன்.

இந்திய அமைதி காக்கும் படைத் தளபதிகளான ஜெனரல் ஹர்க்கிரட் சிங்,ஜெனரல் தீபேந்திர சிங் மற்றும் பிரிகேடியர் பேர்டினன்டோஸ், ஆகியோருடனும் நான் கலந்துரையாடினேன். இந்த மூவருமே ஸ்ரீலங்காவில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள்.

யாழ்ப்பாண விஜயத்தின் பின்னர் எனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கொடுத்தேன். அப்போது ஜனாதிபதி ஜெயவர்தனவின் மகன் ரவி ஜெயவர்தன அவர்கள்தான் பாதுகாப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தார். அவர் மிகவும் திறமையுள்ள நேர்மையான ஒரு மனிதர். பணம் தொடர்பான விடயங்களை பொறுத்தவரை ஜனாதிபதி ஜெயவர்தன அவர்களும்கூட மிகவும் நேர்மையானவர்.

கேள்வி: நீங்கள் பிரபாகரனின் சமையல்காரரையும் சந்தித்தீர்களா?

பதில்: ஆம், அவர் சமையல்காரனாகவும் அதேசமயம் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு தலைவராகவும் இருந்தார். நான் பிரபாகரனின் மருத்துவரையும்கூட சந்தித்தேன். இந்த நபர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு கற்பனா இன்பம் இருப்பதை நான் அறிந்துகொண்டேன். அவரது கற்பனை அவர் பற்றார்வமுள்ள விசிறியாக இருந்த ஹாலிவூட் திரைப்படங்களை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. அவர் ஹாலிவூட் படங்களைப் பார்த்து தனது ஓய்வு நேரத்தில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுத்து வந்தார். ஹாலிவூட் திரைப்படங்கள் அவருக்கு அறிவுவழங்கும் ஒரு வளமாக இருந்தன. பிரபாகரனுக்கு பிடித்தமான உணவு இந்திய சீன சமையல்கள் மற்றும் ஐஸ் கிறீம் என அவரது சமையல்காரர் தெரிவித்தார்.மேலும் தனது சொந்த உணவை தன்கையாலே சமைப்பதை அவர் மிகவும் விரும்பினார்.

கேள்வி: அவரது மருத்துவர் என்ன சொன்னார்?

பதில்: பிரபாகரன் அவரது நாசியில் உள்ள விழுதை நீக்க ஒரு சிறிய அறுவை சிகிச்சை மட்டும் செய்துகொள்ள வேண்டும், என அவர் சொன்னார். புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனையில் அது நடத்தப்பட்டது.

கேள்வி: உங்கள் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்தனவின் கருத்து என்னவாக இருந்தது?

பதில்: எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவுடன் சண்டையிடும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் இந்தியாவுக்கு எதிராக போரை ஆரம்பித்தால் எல்.ரீ.ரீ.ஈ அதன் முடிவை 72 மணித்தியாலங்களில் காணும் என்று இந்தியா தன்னிடம் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.

கேள்வி: ஆனால் எல்.ரீ.ரீ.ஈ உடனான போரை இந்தியா வெற்றிகொள்ள தவறிவிட்டதே…..

பதில்: அங்குதான் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயினை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.. ஆனால் இந்தியா அப்போது கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. மொத்தமாக 1.555 இராணுவ வீரர்களை எல்.ரீ.ரீ.ஈ கொன்று குவித்ததுடன் இந்தியா தனது இராணுவ பெருமையையும் இழந்தது.

பிரபாகரன் நெத்தியாகுளத்தில் ஒன்று நாலு தளம் என்கிற பெயருடைய ஒரு முகாமை நிறுவியிருந்தார். அவருடைய யுத்தங்கள் யாவும் அஜித் மகேந்திரராஜா என்கிற மாத்தையாவினாலேயே வழி நடத்தப்பட்டன, எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தலைவராக அவர் இருந்தார். 1990 க்குப் பிறகு பிரபாகரன் அவரை நீக்கிவிட்டார். அதன்பின் மாத்தையா றோவுடன் உறவுகளை ஏற்படுத்தி பிரபாகரனை அகற்ற சதி செய்தார். அது பிரபாகரனுக்கு தெரிய வந்தது, மற்றும் மாத்தையாவின் உயிருக்கும் முடிவு ஏற்பட்டது.

கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்தன இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டது நேர்மையான நோக்கத்துடனா அல்லது வெறுமே இந்தியாவின் அழுத்தங்களினாலா?

பதில்: இந்திய – இலங்கை உடன்படிக்கையை ஜே.ஆர் விருப்பத்துடன் கைச்சாதrajiv_jeyawardana்திட்டார் என்பது தவறான ஒரு கருத்து. இந்தியா ஜே.ஆரை மறைமுகமாக அச்சுறுத்தியது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாவிட்டால் நாடு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரும் என அவருக்கு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. இந்தியா மிகப் பெருமளவிலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்துள்ளது, அவர்களின் மனதில் நாட்டை அழிக்கும் எண்ணம் இருந்தால் அவர்களால் நாட்டை அழித்துவிட முடியும் எனத் தெரிந்தது. அவருக்கு பின்னால் பதவிக்கு வந்த பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க, மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரைப் போலவே ஜே ஆரும், நாட்டை மிகவும் நேசித்தார். அந்த மோசமான தருணத்தில் நட்பு முறையிலான உறவே நாட்டை காப்பாற்றும் என அவர் புரிந்து கொண்டார்.

13வது திருத்தம் ஸ்ரீலங்காவுக்கு பயனற்றது,அது இந்தியாவின் அழுத்தம் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா தனது இன அடிப்படையில் பிளவு படுத்தப்பட்ட ஆட்சிமுறையை ஸ்ரீலங்காமீது திணித்தது. இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கையில் ஸ்ரீலங்காவில் வெறும் 20 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ஸ்ரீலங்காவின் முழு குடிமக்களையும் மும்பாயில் குடியமர்த்தி விடலாம். எனவே ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டுக்கு இந்திய முறைமை பொருந்தாது. கூடிய விரைவிலேயே 13வது திருத்தத்தை நாங்கள் ஒழித்துவிட வேண்டும்.

கேள்வி: பிறகு ஏன் ஜனாதிபதி ஜெயவர்தன இந்திய இராணுவத்தை வரவழைத்தார்?

பதில்: ஜே.ஆர் இந்தியாவை அழைக்கவில்லை, ஆனால் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா அவருக்கு அறிவித்தது. ஜேவிபியின் அச்சுறுத்தல் காரணமாக இந்திய இராணுவம் இங்கிருப்பதை ஜே.ஆர் விரும்பினார் என சிலர் சொல்கிறார்கள். ஒருவேளை அவர் அப்படி சொல்லியும் இருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல.

தங்கள் இராணுவத்தை ஸ்ரீலங்காவில் பயன் படுத்தப்போவதாக இந்தியா சொன்னது, அதை எதிர்க்கும் நிலையில் ஜே.ஆர் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் தலையீட்டுக்குப் பிறகுதான் ஜேவிபியின் உண்மையான அச்சுறுத்தல் தலைதூக்கியது. அந்த நேரம் ஜேவிபி தன்னை நன்கு அமைத்துக்கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் சண்டையிட தயாராக இருக்கவில்லை. இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னர் அவர்களிடம் 10 சுடுகலன்கள்தான் இருந்திருக்கும். 1987 ஜூலைக்குப் பிறகுதான் அவர்கள் ஒரு போராட்ட சக்தியாக உருவெடுத்தார்கள்.

கேள்வி: ரவி ஜெயவர்தன எஸ்.ரி.எப் படைப்பிரிவை உருவாக்கியபோது நீங்கள் அவருக்கு நெருக்கமாக இருந்தீர்களா?

பதில்: எஸ்.ரி.எப் படைப்பிரிவை உருவாக்கிய ரவி ஜெயவர்தனவுடன் நான் அத்தனை நெருக்கமாக இருக்கவில்லை. பயங்கரவாதத்துடன் மோதுவதற்கு சாதாரண காவல்துறை படைகள் தகுதியற்றவை, மற்றும் விசேடமாக பயிற்சி பெற்ற காவல்துறை படைகள் இந்தப் பணிக்கு அவசியம் என அவருக்கு யாரோ ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

இந்தச் சமயத்தில் றிச்சட் கிளாட்டர்பக்; எனும் ஒரு பிரித்தானிய ஜெனரல் ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்தார். பயங்கரவாத அமைப்பை முற்றாக நிர்மூலமாக்கிய முதலாவது நாடு, பிரித்தானிய மலேயா ஆகும். அது கடந்த நூற்றாண்டில் நடைபெற்றது, இந்த நூற்றாண்டில் பயங்கரவாதத்தை துடைத்தழிப்பதை காணும் பாக்கியம்பெற்ற ஒரேநாடு ஸ்ரீலங்கா.

மலாயாவில் நடத்திய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டு இயக்குனராக இருந்தவர் இந்த ஜெனரல். நான் அவரை சந்தித்ததுடன் அவரது மரணம்வரை அவருடன் ஒரு நெருக்கமான உறவை பேணி வந்துள்ளேன். ஜெனரல் கொப்பேகடுவ,மற்றும் எனக்கு நினைவில் உள்ளவரையில் அப்போது கேணலாக இருந்த ஜானக பெரேரா, அவர்தான் வந்திருந்த பிரித்தானிய ஜெனரலுக்கு சேவை அதிகாரியாக கடமையாற்றியவர், ஆகியோர் முன்னிலையில் வைத்து ஜனாதிபதி ஜெயவர்தனவுக்கு, ஜெனரல் றிச்சட் நல்ல ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர் முதல் அந்த இயக்கம் முழுவதையும் முற்றாக அழிக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார். 13 நவம்பர் 1989 ல் ரோகண விஜேவீர கொல்லப்பட்டார், மற்றும் 19 மே 2009ல் பிரபாகரன் கொல்லப்பட்டார். இறுதியாக இரண்டு பயங்கரவாத இயக்கங்களுமே முடிவடைந்து விட்டன.

கேள்வி: நீங்கள் ரோகண விஜேவீரவை சந்தித்துள்ளீர்களா?

பதில்: இல்லை நான் ரோகண விஜேவீரவையோ அல்லது கமநாயக்காவையோ சந்தித்ததில்லை. ஜேவிபி யின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களை நான் சத்தித்துள்ளேன்.

கேள்வி: பெரும்பாலும் உங்களை அதிர்ச்சியடைய வைத்தது எது?

பதில்: சிங்கள ஜேவிபி மற்றும் தமிழ் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருவருடைய பிரச்சினைகளுமே ஒரே மாதிரியானவை. அவை பொருளாதார பிரச்சினைகள். தலைவர்கள் தங்களை வடக்கு மற்றும் தெற்கு என்று பிரித்துக் கொண்டாலும், ஆட்சி முழுவதுமாக எதிர்கொண்டது ஒரே மாதிரியான பிரச்சினைகளையே.

கேள்வி: விஜேவீர கொல்லப்பட்டது ஜனாதிபதி பிரேமதாஸவின் அறிவுடனா அல்லது அது ரஞ்சன் விஜேரத்ன என்கிற தனியாளின் தீர்மானமா?

பதில்: விஜேவீர இராணுவத்தால் பிடிக்கப்பட்டதின் பின்னர் காவல் திணைக்களத்தை சேர்ந்த ரொணி குணசிங்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது பிரேமதாஸவிற்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கொலை செய்யும்படி பிரேமதாஸ உத்தரவிட்டார் எனச் சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது தவறு. கொலையாளிகளுக்கு உயிர் வாழ்வதற்கு தகுதியில்லை எனும் உறுதியான முடிவை ரஞ்சன் விஜேரத்ன கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் விஜேவீர பற்றி அவர் முடிவெடுத்தார். பிரபாகரன் மற்றும் விஜேவீர ஆகிய இருவரும் இந்த நாட்டை சீரழித்த தலைவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் திறமையுள்ள தலைவர்கள். சிறிய அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் இருவருமே கொலையாளிகள் என்பதால் அவர்களது மறைவுக்காக யாராவது அழுது புலம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

(தொடரும்)

– ஹசித்த குறுப்பு

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.