தீபாவளின்னாலே கலர்புல்லான விஷயம் தானே! ஸ்ரேயா பேட்டி

0
399

‘‘எனக்கு 20 உனக்கு 18’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது. இவர் தனது தீபாவளியை எப்படி கொண்டாட போகிறார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்… (நடிகை ஸ்ரேயா -படங்கள்)

‘‘எனக்கு 20 உனக்கு 18’’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது.

அதனால் அந்த படத்திலிருந்தே ஸ்ரேயாவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் டாப்மோஸ்ட் ஹீரோயினியானார் ஸ்ரேயா. இந்தாண்டு இவர் தனது தீபாவளியை எப்படி கொண்டாட போகிறார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்…

* பல மொழிகளில் நடிச்சிருக்கீங்க; எந்த மொழி வசதியா இருக்கு?

இந்தி, ஆங்கிலம், ரொம்ப வசதியா இருக்கு. மொழிகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், எந்த மொழி படம்னாலும், உணர்வு ஒன்று தான். அழ சொன்னால் அழணும், சிரிக்க சொன்னால் சிரிக்கணும், அவ்ளோதான்.

* உங்கள் படங்களில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு?

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘மழை’ படத்தில் ‘நீ வரும்போது’ – பாட்டு ரொம்ப பிடிக்கும். அப்புறம் ரகுமான் இசையில் ‘சிவாஜி’ படத்தில் ‘ஆம்பல்’ பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு.

* ரஜினி கூட நடித்த அனுபவம்?

எளிமைக்கு மறுபெயர் ரஜினி. எங்கிருந்து வந்தோம்னு எப்போதும் மறக்காம வாழும் மனிதர். நல்ல இதயம் உள்ளவர். எவ்ளோ பெரிய நடிகர்னு, ஒரு நாளும் பந்தா காட்டமாட்டார். ரொம்ப சிம்பிள். ஈகோ இல்லாதவர் ரஜினி. நான் அதிசயித்து பார்த்த மனிதர் அவர்.

* எப்போது திருமணம்?

கண்டிப்பா, ஒரு நாள் நடக்கும். ஆனால், அது எப்போதுனு தெரியாது. எல்லாருக்கும் தெரியும்படிதான் திருமணம் செய்வேன். நான் திருமணம் செய்யும்போது, விரலில் மோதிரம் பார்க்கலாம்.

* காதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?

அது, ஒருவரின் சொந்த விஷயம். அதில் மற்றவர்கள் தலையிடுவதும், அதைப் பற்றி பேசுவதும், வரம்பு மீறல்.

* இந்த வருஷம் தீபாவளி?

மும்பையில் தான், தீபாவளி கொண்டாடப் போறேன். குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாம் வருவாங்க. வீடு முழுக்க விளக்குகளால் அலங்காரம் செய்து, கலர்புல்லா மாற்றி விடுவோம். ஸ்வீட்ஸ், புது டிரஸ், இப்படி, மகிழ்ச்சிக்கான எல்லா விஷயங்களும் இருக்கும். தீபாவளின்னாலே, வண்ணமயமானது தானே.LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.