சுவாரசிய அரச குடும்ப திருமணம்: இந்தோனேசிய மன்னர் யோகர்டடா சுல்தான மகளின் திருமணம்.

0
510


அரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச குடும்ப திருமணத்தை, அதன் சடங்குகளை பார்க்க ஆசையா? (வீடியோ, படங்கள் இணைப்பு)

அரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச குடும்ப திருமணத்தை, அதன் சடங்குகளை பார்க்க ஆசையா?

இந்தோனேசியாவின் சுல்தான் ஹமென்க்குபுவொனொ-10 தமது 4-வது மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். சுல்தானின் பெயரையே உச்சரிக்க முடியவில்லையா? இதோ திருமணம் செய்த இளவரசியின் பெயர் – குஸ்டி ராது கஞ்செங் ஹாயு.

இந்த 29 வயது இளவரசி, கன்ஜெங் பன்கிரென் ஹர்யோ நொடெனொகொரோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வயது 39. இளவரசிக்கும் இவருக்கும் உள்ள வயது வித்தியாசம் 10.

இளவரசிக்கு சீக்கிரம் திருமணத்தை முடித்துக் கொடுக்காமல், 29 வயதாகும்வரை எதற்காக காத்திருந்தார் சுல்தான் என்ற கேள்வி எழுகிறதா?

காரணம், 29 வயது இளவரசியும், அவரைவிட 10 வயது மூத்த இளவரசரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்தனர்… அமெரிக்காவில்.

இந்தோனேசியா பள்ளியில் மலர்ந்த காதல் இது. மேற்படிப்புக்காக இளவரசி வாஷிங்டன் பல்கலைக்கழகம் சென்றபோது, இளவரசர் நியூஜெர்சியில் இருந்தார்.

அதற்காக இளவரசி பல்கலைக்கழகம் சென்றபோது, 10 வயது அதிகமான இளவரசரும் படித்துக் கொண்டிருந்தார் என்று சொல்ல இது என்ன விஜயகாந்த் படமா? தமிழக ஹீரோ விஜயகாந்த போல அந்த வயதிலும் படித்துக் கொண்டிருக்கவில்லை இந்தோனேசிய ஹீரோ.

அவர் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்… ஐ.நா. சபை நியூயார்க் தலைமையகத்தில்.

இப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் சுல்தான். (இந்தோனேசியாவில் சுல்தான்களுக்கு பல மனைவிகள் இருப்பது வழக்கம். ஆனால், விதிவிலக்காக இந்த சுல்தானுக்கு ஒரேயொரு மனைவிதான்)

வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட வி.ஐ.பி.கள் வந்து கலந்துகொண்ட இந்த அரச குடும்ப திருமணம், இந்தோனேசிய அரச சம்பிரதாயப்படி நடந்தது. இவர்களுடைய திருமணச் சடங்குகள், இந்திய திருமணச் சடங்குகளை சில விதங்களை ஒத்திருந்ததை நாம் கொடுத்துள்ள போட்டோக்களில் பார்க்கவும்.

இளவரசி, தந்தையின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது… மலர்கள் நிரப்பப்பட்ட தண்ணீரில் இளவரசரும் இளவரசியும் குளிப்பது (தனித்தனியாகதான்)… குதிரைவண்டியில் இளவரசர் வந்து இறங்குவது… இளவரசியை, இளவரசர் அலாகாக தூக்குவது (மற்றொரு ராஜகுடும்ப உறுப்பினரின் உதவியுடன்)…. பணியாட்கள் தென்னம் குருத்துக்களால் அலங்காரங்கள் செய்வது என, சுவாரசியமான காட்சிகளை பாருங்களேன்.Day 1: On Monday Gusti Ratu Kanjeng Hayu was bathed by her mother Gusti Kanjeng Ratu Hemas, during the bath ritual, know as ‘Siraman’ Ritual, in Bangsal Keputren at Kraton Palace

Groom KPH Notonegoro, in white, arrived with his family on Monday at Kraton Palace as part of the Royal Wedding celebrations

The groom was similarly purified with water in the room filled with fresh flowers and pomp

Princess Hayu was covered with a cape of flowers during her bath purification ritual. held at the sultan’s palace in Yogyakarta, on Indonesia’s island of Java

KPH Notonegoro arrived by carriage to the palace on Monday. Wednesday’s main event will feature 12 royal carriages as part of the parade

The groom, 39, currently works for the United Nations in New York

Princess Hayu asked for her parents’ blessing at least twice on Monday. Here she is again at her father’s feet at Kraton Palace as her mother sits next to him

KPH Notonegoro proposed to his longtime girlfriend in June of this year

THE OTHER ROYAL WEDDING: This week Indonesia’s Sultan Hamengkubuwono X, seated, is celebrating the marriage of his daughter Gusti Ratu Kanjeng Hayu, seen here kneeling at his feet on Monday as she received her father’s blessing


LEAVE A REPLY

*