சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பசுக்கள்

0
454

நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில் காலமான உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் நடைபெறும் பசுத் திருவிழா 22.8.13 அன்று இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு)


நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில் காலமான உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் நடைபெறும் பசுத் திருவிழா 22.8.13 அன்று இடம்பெற்றது.


நேபாளத்தில் இந்து மத வழக்கத்தின்படி, கடந்த ஒரு ஆண்டில் தமது உறவினர்களை இழந்த குடும்பங்கள் அனைத்தும், கட்டாயமாக இந்தத் திருவிழாவில் பங்குபெற வேண்டும். அப்போது அவர்கள் ஒரு பசுமாட்டை வீதிகளில் பிடித்துச் செல்வர்.


அவ்வகையில் ஒரு பசு மாடு கிடைக்கவில்லை என்றால், ஒரு சிறுவனை பசுமாடு போல அலங்கரித்து வீதிகளில் அழைத்துச் செல்வர்.


ஒவ்வொரு ஆண்டும், இறந்து போன தமது உறவினர்களுக்கு முக்தியும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திருவிழா நடத்தப்படுகிறது. காலமானவர்கள் சொர்க்கத்தை அடைய, புனிதமாக கருதப்படும் பசு உதவும் என்று உறவினர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இந்தத் திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து சிறுவர்களும் பசுமாடுகள் போல வேடமணிவதில்லை. இந்தப் படத்தில் கிருஷ்ணர் போல ஒரு சிறுவன் வேடமிட்டு செல்கிறார்.

இந்த ஊர்வலத்தின் போது மேலும் பல சிறுவர்கள் பாரம்பரிய மத்தளங்களை இசைத்தபடி செல்வார்கள்.

திருவிழாவின் போது ஊர்வலத்தில் பங்குபெறும் சிறார்களுக்கு பாலும் பணமும் வழங்கப்படும்.

ஆனால் அண்மைக் காலமாக இந்தத் திருவிழாவின் போது ஒருபால் உறவுக்காரர்களின் கொண்டாட்டமும் இடம்பெறுகிறது.

சம உரிமைகள் கோரி நூற்றுக்கணக்கான ஒருபால் உறவுக்காரர்கள் இந்த ஊர்வலத்தில் பங்குபெற்றனர்.

LEAVE A REPLY

*