தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டை குழந்தைகள்

0
1584

அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக் குழந் தைகள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட் டுள்ளது. (படங்கள் இணைப்பு)
அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக் குழந் தைகள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட் டுள்ளது.


குட்டி யானை இடித்ததால் தடுமாறிய முதல்வர் : முதுமலை காப்பகத்தில் பரபரப்புதீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!
01-08- 2013

திண்டிவனம் : திண்டிவனம் அருகே, இரண்டு மாத கைக்குழந்தை தீப்பிடித்து எரிந்து வருவதால், குழந்தையின் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த, டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர், கர்ணன், 26. இவரது மனைவி ராஜேஸ்வரி, 23. இவர்களுக்கு, ராகுல் என்ற இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி, தன் தாய் வீடான, மோழியனூரில் தங்கியிருந்தபோது,  இரண்டு  மாத ஆண் குழந்தை  திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால், வீடும் எரிந்தது. தீக்காயமடைந்த குழந்தையை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால், பில்லி சூனியமாக இருக்கலாம் என, அக்கம்பக்கத்தினர் பயமுறுத்தினர். பின், புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள, உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கினார். அங்கும் இரண்டு முறை, குழந்தைக்கு தீப்பிடித்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திண்டிவனம் அருகே உள்ள, கர்ணனின் சொந்த ஊரான, டி.பரங்கணியில் தங்கியிருந்தபோதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது; வீடும் எரிந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, நேற்று, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர்கள் வியப்பு : தீக்காயமடைந்த ராகுலை, உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சையளித்த, டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “”இரண்டு மாத குழந்தைக்கு, நான்கு முறை, உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு, ஆரோக்கியமாக இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது, புரியாத புதிராகவே உள்ளது,” என்றார்.

தந்தை கண்ணீர் : குழந்தை ராகுலின் தந்தை, கர்ணன் கூறியதாவது: குழந்தை பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளும், ஏதாவது விபரீதம் நடந்து வருகிறது. எங்கு கொண்டு சென்றாலும், எங்களை ஊருக்குள் சேர்க்கவே பயப்படுகின்றனர்.

இதனால், எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என, குழப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

*