இன்றைய சிறப்பு படங்கள் (27-7-2013)

0
1064

போப்பாண்டவர் பிரான்சிஸ் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவின் முக்கியமான கடற்கரைப் பகுதியான கோபாகபனா கடற்கரையில் உலக இளைஞர் தினவிழாவிலும் நேற்று முன்தினம் அவர் கலந்து கொண்டார். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதால் கடற்கரைப்பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக இருந்தது.

போப்பாண்டவர் பிரான்சிஸ் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவின் முக்கியமான கடற்கரைப் பகுதியான கோபாகபனா கடற்கரையில் உலக இளைஞர் தினவிழாவிலும் நேற்று முன்தினம் அவர் கலந்து கொண்டார். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதால் கடற்கரைப்பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக இருந்தது.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் புதிய வாரிசை வரவேற்கும் விதத்தில், லண்டன் ராணுவ ரிசர்வ் படையினர் நேற்று 62 குண்டுகள் முழங்க வணக்கம் செலுத்தினர். (உள்படம்): செயின்ட் மேரீஸ் மருத்துவமனை வாயிலில், இளவரசிக்கு குழந்தை பிறந்ததை அறிவிக்கும் அதிகாரி.
கர்நாடகா மாநிலம் பேலூர் அருகே நேற்று அரசுக்கு சொந்தமான பயணிகள் பஸ், கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் 8 பேர் பலியாயினர். தண்ணீரில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சில் இருந்து இறந்தவரின் உடலை மீட்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் யானை இறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். சிறிய குன்று போல சாய்ந்து கிடக்கிறது யானை.

தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ராட்சத பாறைகள் கீழே சரிந்து உருண்டு விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் கோசினோ கிராமத்தில், வெதுவெதுப்பான மினரல் வாட்டர் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பூமியில் 3,904 அடி ஆழத்தில் எடுக்கப்படும் இந்த தண்ணீரில் குளித்து எழும்போது புத்துணர்வு கிடைக்கிறது என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு செல்கின்றனர்.

கடலை தூர்வாரி ஆழப்படுத்தும் கப்பலை (உள்படம்) மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று எழும்பூரில் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நோன்பு கஞ்சி அருந்துகிறார். அருகில் தமிழ் மாநில தேசிய லீக் பொது செயலாளர் திருப்பூர் அல்தாப் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்.

முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை, திமுக தலைவர் மு.கருணாநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு, போரில் இறந்த வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங், கடற்படை தளபதி டி.கே.ஜோஷி மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் மாநகராட்சி குப்பை லாரி (உள்படம்) மோதி கல்லூரி மாணவி வைஷாலி பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் சுரங்க கார் பார்க்கிங் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக தரைத்தளத்தில் கான்கிரீட் போடும் ஊழியர்கள்.

ஸ்பெயினின் சாண்டியாகோ டி காம்போஸ்டெல்லா நகருக்கு அருகே அதிவிரைவில் வந்த பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 78 பேர் இறந்தனர். தண்டவாளத்தில் அலங்கோலமாக ரயில்பெட்டிகள் கிடக்கின்றன.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மொத்த சந்தைக்கு புனேயில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகளவில் உள்ளது. இவை கிலோ ரூ32க்கு விற்கப்படுகிறது.

கொள்ளை போன நகைக்கடையில் தடயத்தை சேகரிக்கும் போலீசார். உள்படம்: காஸ் வெல்டிங் மூலம் வளைக்கப்பட்ட ஜன்னல்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி நோன்பு கஞ்சி அருந்துகிறார். அருகில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன்.

கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுகள் தரை தட்டி நிற்கின்றன.

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக ரயில் இன்ஜினை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரிமுனை பந்தர் தெருவில் உள்ள கடையில் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ள தேசிய கொடிகள்.


கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு மெரினாவில் நேற்று கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு பயிற்சி அளிக்கிறார்.

போக்குவரத்து காவல்துறை சார்பில் துரைப்பாக்கம் சிக்னல் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

மதுரவாயல் லட்சுமி நகர் ராஜிவ்காந்தி தெரு சேறும் சகதியுமாக உள்ளதால் மாணவ, மாணவிகளுடன் பெண்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இதன் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெற்குன்றம் ஸ்கூல் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது. துர்நாற்றம் தாங்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. நோயாளிகள் வரும் இடம் என்பதால் இங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வலியுறுத்தப்படுகிறது.

ராயபுரம் பழைய சிறைச்சாலை சாலை படுமோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் புழுதியை கிளப்பிவிட்டு செல்வதால் நடந்து செல்வோரும் அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிகளும் சிரமப்படுகின்றனர்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலை எழிலகம் அருகே போக்குவரத்து நெரிசலான நேரத்தில் குதிரை ஒன்று திடீரென குறுக்கே புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் திணறினர்.

மெரினா கடற்கரையில் தங்கியிருந்து அசுத்தமாக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்

கேரளாவுக்கு லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதால், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. பண்ணைகளில் இருந்து குடோன்களுக்கு முட்டைகளை கொண்டு செல்லும் தொழிலாளர்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கேதார்நாத் கோயில் பெருமளவில் சேதமடைந்தது. மாநில முதல்வர் விஜய் பகுகுணா (வலது ஓரம்) நேற்று கோயிலை பார்வையிட்டார்.

உத்தரப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம், ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. அலகாபாத்தில் நேற்று வன்முறையில் ஈடுபட்ட மாணவன் மீது போலீசார் தடியடி நடத்துகின்றனர். இது தொடர்பான வழக்கில் உ.பி. அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு அலகாபாத் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பத்ராச்சலம் மலைப் பாதையில் உள்ள ஆஞ்சனேய சுவாமி கோயில் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பிவிட்டன. பெல்லாரி மாவட்டம் ஹோஸ்பேட்டில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை கடைவீதியில் யானைகள் சாவகாசமாக நடந்து செல்வதை பொது மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சிதரும் சுந்தரராஜ பெருமாள்.

கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரிக்கு வந்தது. பரந்து விரிந்த ஏரியில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

தக்காளி விலை நேற்று குறைந்தது. கிலோ ரூ30க்கு விற்கப்பட்டது. ஜோன்ஸ் சாலையில் வண்டியில் குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளியை வாங்கும் பெண்கள்

மழை தொடர்வதால் பல இடங்களில் குடை விற்பனை ஜரூராக நடக்கிறது. எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் வண்ணக் குடைகள் ரூ70 முதல் ரூ240 வரை ரகம் ரகமாக விற்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்துக்கு தீவிரவாத மிரட்டல் வந்ததை அடுத்து, துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எழும்பூர் மியூசியத்தில் இந்த வாரம் வைக்கப்பட்டுள்ள வாராஹி சிலையை ஆர்வத்துடன் பார்க்கும் பள்ளி மாணவிகள்.

பாஜ மாநில பொதுச்செயலாளர் படுகொலையை கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் மறியல் செய்த பாஜவினர், கல்வீசி நொறுக்கிய மாநகர பஸ்.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பேடு புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் எரிவாயு நிரப்ப பல மணி நேரம் ஆவதால், எண்ணூர் துறைமுகம் சாலை மற்றும் திருவொற்றியூர்,பொன்னேரி சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் எரிவாயு லாரிகள்.

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. பள்ளிகளில் சத்துணவை முதலில் தலைமை ஆசிரியர் சாப்பிட வேண்டுமென அதில் கூறப்பட்டது. இதன்படி, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் முதல் ஆளாக சத்துணவு சாப்பிடுகிறார்.

LEAVE A REPLY

*