கடலைக்குள் கரன்சி நோட்டு…!! சமைத்த இறைச்சிக்குள் நாணயம்!! அதிகாரிளை மிரள வைத்த பலே கடத்தல் கில்லாடி..!

0
370

டெல்லி விமான நிலையத்தில் நூதனமான முறையில் வெளிநாட்டுப் பணத்தைக் கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து பணம், நகை, போதைப் பொருள்கள், மின்சார உபகரணங்கள் போன்றவை கடத்துவது தற்போது அதிகரித்து வருகின்றன.

இது போன்ற கடத்தலில் ஈடுபடுபவர்கள் தாங்கள் கொண்டு வரும் பைகள், உடலில் ஏதாவது ஒரு பகுதியில் மறைத்து வைப்பது அல்லது போதைப் பொருள்களை பொட்டலமாக்கி விழுங்குவது எனப் பல வழிகளில் பொருள்களைக் கடத்தி வருகிறார்கள்.

download-1-13ஆனால், ஒருவர் நூதன முறையில் வெளிநாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்துக் கடத்தி வந்த சம்பவம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எப்போதும் படு பிஸியாக இருக்கும் ஓர் இடம்.

அங்கு மக்கள் கூட்டம் குறையவே குறையாது. அப்படியான இடங்களில் எளிதாகப் பொருளைக் கடத்திவிடலாம் என்று எடுத்து வந்து, சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கியுள்ளார் முரத் அலி என்ற இளைஞர்.

நேற்று பிற்பகல் துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று டெல்லி வந்து இறங்கியது.

அதில் பயணித்த அனைத்துப் பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களுடன் வந்த முரத் அலி என்ற இளைஞரின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்துள்ளது.

இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த இளைஞரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரது உடல், உடை, கொண்டுவந்த பை போன்ற அனைத்தையும் சோதனை செய்துள்ளனர்.

download-24ஆனால், எதிலும் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இல்லை. இருந்தும் அந்த இளைஞர் மீது அதிகாரிகளுக்குத் தொடர் சந்தேகம் இருந்துள்ளது.

இறுதியாக அவர் கொண்டு வந்த உணவுப் பைகளைத் திறந்து பார்த்துள்ளனர்.அதிலும் வேர்க்கடலை, சமைத்த இறைச்சி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டுமே இருந்துள்ளன.

அப்போதும் சந்தேகம் தீராக அதிகாரிகள் உணவுப் பொருள்களை திறந்து சோதனை செய்துள்ளனர்.

அந்த உணவில் மறைந்திருந்த கடத்தல் பொருளைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

முரத் அலி கொண்டுவந்த வேர்க்கடலையில் ஒன்றை உடைத்துப் பார்த்தபோது அதில் மடக்கி, சுருட்டப்பட்டுக் கட்டப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் இருந்துள்ளது.

அதேபோல் நிறைய வேர்க்கடலைகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

பிஸ்கட் பாக்கெட்டுகளில், பிஸ்கட்டின் நடுவில் துளையிட்டு அதில் பணம் வைக்கப்பட்டு முன்னும் பின்னும் சில பிஸ்கட்டுகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த இளைஞர் கொண்டு வந்த இறைச்சியிலும், வெளிநாட்டு நாணயங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளார்.

இதைப் பார்த்து ஷாக் ஆன அதிகாரிகள் இளைஞரைக் கைது செய்து அவர் கொண்டு வந்த கடத்தல் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

முரத் அலி கொண்டு வந்த பணத்தில் 2, 22,000 சவுதி ரியால், 2,200 குவைத் தினார், 1,800 யூரோ, 300 ஓமன் ரியால், 1,500 கத்தார் ரியால் போன்ற நாடுகளின் பணம் என மொத்தமாக 45 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

வேர்க்கடலைக்குள் பணம் ஒளித்து வைத்திருந்த வீடியோவை சுங்கத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இது பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*