3 ஆண்களுடன் குடும்பம் நடத்திய பெண்: குழந்தைக்கு 4 ஆவது நபர் உரிமை கோரினார்!

0
330

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் 3 திருமணங்களை செய்து கொண்ட பெண்ணின் குழந்தையை 4 ஆவது நபர் உரிமை கோரிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தன்னுடைய 8 மாத பெண் குழந்தையை விற்றதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது குழந்தையை 4 ஆவது நபர் சொந்தம் கொண்டாடுவதாக தெரிவித்தார்.

கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அப்போது அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதனை அறிந்த கணவர் மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து அவர் வினோத்துடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தினார்.

சில மாதங்களுக்கு பின்னர் வினோத் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அங்கிருந்து பணம் அனுப்பி வந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

கர்ப்பமாக இருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரை அந்த பெண் 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வினோத்தின் உறவினர்களிடம் கொடுத்துவிட்டார்.

மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையில் தான் வினோத்தின் உறவினர்களிடம் கொடுத்த பெண் குழந்தை தனக்கு பிறந்தது என உத்தரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்கிற வேல்முருகன் சொந்தம் கொண்டாடினார்.

இதனால் அதிகாரிகள் திகைப்படைந்தனர். ஆனால் குழந்தையின் தாயோ வினோத்துக்கு பிறந்த குழந்தை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருவரும் குழந்தையை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட, வினோத்தின் உறவினரிடம் இருந்த குழந்தையை பெற்று தாயாரிடமே ஒப்படைத்தனர்.

மேலும் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் குழந்தைகள் நல அலுவலகத்தில் பெண் குழந்தையுடன் ஆஜராக வேண்டும் என அந்த பெண்ணுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடிய சரத்திடம் நீங்கள் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*