மகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலைசெய்த இருவருக்கு தந்தை சிபாரிசு செய்த மரணதண்டனை

0
41

சோமாலியாவில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவரைக் குறித்த சிறுமியின் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க துஷ்பிரயோகம் மேற்கொண்ட இருவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆயிஷா இலியாஸ் ஏடன் என்ற குறித்த சிறுமி சோமாலியாவில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வைத்துக்  கடத்தப்பட்டு, பாலியல் துஷ்பியோகம்  செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

அடையாளம் காணப்பட்ட குறித்த குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொலைசெய்து தண்டனை நிறைவேற்ற வேண்டுமென கொலைசெய்யப்பட்ட சிறுமியின் தந்தை அந்நாட்டு நீதித்துறையிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட இருவர் மீதும் சோமாலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள பொசாசோ நகரச் சதுக்கத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

*