5 நாள்களாக தனிமை.. காப்பாற்றுங்கள் மோடி ஜி.. ஜப்பானில் கண்ணீர் வடிக்கும் 160 இந்தியர்கள்

0
26

ஜப்பான் துறைமுகத்தில் தவிக்கும் இந்தியர்கள் தங்களை மீட்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹாங்காங்கிலிருந்து ஜப்பான் நகருக்கு 3,700 பயணிகளுடன் வந்தடைந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகோகாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பயணித்த 137 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தக் கப்பலில் 160 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரலவசநனனனன
டைமண்ட் பிரின்சஸ் கப்பல்

இதுவரை இந்தியர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

8 பயணிகள், வேலையாட்கள் என 160 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர். இந்நிலையில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் பினய் குமார் சர்கார் என்பவர் பிரதமர் மோடிக்கும் ஐ.நா-வுக்கும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “நாங்கள் மிகவும் பயந்து காணப்படுகிறோம். 5 நாள்களாகக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

பணியாளர்கள் 66 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வமாக எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவில்லை.

இந்தக் கப்பலில் 3,700 பேர் உள்ளனர். இதுவரை 500 நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கமும் ஐ.நா சபையும் எங்களுக்கு உதவ வேண்டும். எங்களுக்கு தெர்மாமீட்டர் வழங்கியுள்ளனர்.

கப்பலில் உள்ளவர்களில் காய்ச்சல் ஏற்பட்டு அவர்களது உடல் வெப்பநிலை 37.5 செல்சியஸ் தாண்டினால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள்.

ஜப்பான் அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதுவரை எங்களில் 90 சதவிகித பேருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தயவு செய்து எங்களை உடனடியாக மீட்பதற்காக நடவடிக்கை எடுங்கள்.

இந்திய அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். எங்களை நல்ல உடல் நலத்துடன் மீண்டும் எங்கள் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

*