அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது -மனோ கணேசன்

0
150

தேசிய சுதந்திர தின நிகழ்வில் சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில் தமிழில் தேசிய கீதத்தை நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது.

ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.

தமது சமூகதள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவில்லை. கடந்த ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை,  இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகார அமைச்சர் என்ற  வயைில்   அமைச்சரவை உபகுழு மூலம் இதனை முன்னெடுத்திருந்தேன்.

இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாது என்ற செய்தி பரவிய நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கவனத்துக்கு  பலமுறை  கொண்டு வந்தேன்  “இந்த கடைசி தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள் என நேற்றும் கேட்டிருந்தேன்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

*