கிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி

0
486

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த நபர் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார்.

இந்நிலையில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.

கொலை செய்தமைக்கான காரணத்தை குறித்த காணொளியில் அந்த இளைஞர்

Thanks IBC tamil

தொடர்புடைய செய்தி

மயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி!!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்வத்தின் போது சுகந்தன் சகுந்தலா வயது 25 என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிழிந்துள்ளதோடு, அவரின் உறவினரான அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி யுவதி காயமடைந்துள்ளார்.

அத்தோடு குறித்த நபர் தன்னை தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்யத நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

 

LEAVE A REPLY

*