-0.4 C
Zurich, CH

மந்திரத்தால் கணவனை அடைய நினைத்த பெண்ணிடம் பாலியல் சேட்டை : 20,000 ரூபா பணமும் பெற்ற நிலையில் சிக்கினார் மந்திரவாதி

0
211

இளம்பெண் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபா பணத்தைப்பெற்று மோசடி செய்தமை மற்றும், அப்பெண் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்தமை போன்ற இரு குற்றச்சாட்டுக்களின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மந்திரவாதி ஒருவரை நீதிபதி இரண்டு இலட்ச ரூபா சரீரப்பிணையில் விடுவித்துடன் எதிர்வரும் 19-08-2020 மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜானக்க விதானாராய்ச்சி, மேற்குறிப்பிட்ட மந்திரவாதியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தார்.

கிராந்துருகோட்டையைச் சேர்ந்த அலுத்தரம் என்ற இடத்தின் மந்திரவாதியொருவரே, கிராந்துருகோட்டைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவராவார்.

ஏற்கனவே, இம் மந்திரவாதியின் மந்திர சக்தியினால், தனது கணவன் தன்னை விட்டுப்பிரிந்து சென்றதாக நம்பிக்கை கொண்டிருந்த 27 வயது நிரம்பிய குறித்த இளம் பெண், மீளவும் தனது கணவனை தனக்குப் பெற்றுத்தருமாறு, மந்திரவாதியிடம் கோரியுள்ளார்.

Abuse-1மந்திரவாதி அக்கோரிக்கைக்கு இணங்கி ஆரம்ப பூஜை செலவுகளுக்கு இருபதாயிரம் ரூபா பணத்தையும் அப்பெண்ணிடமிருந்து பெற்றுள்ளார்.

அத்துடன், ஆரம்பப் பூஜைக்கு, குறித்த இளம் பெண்ணை மட்டும் தனிமையில் வரும்படி மந்திரவாதி கோரியதற்கமைய, தனிமையில் சென்ற அந்த இளம் பெண் மீது பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள, மந்திரவாதி முயற்சித்துள்ளார்.

மந்திரவாதியின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற அந்த இளம்பெண் கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையம் சென்று, தனக்கேற்பட்ட நிலை குறித்தும் தன்னிடம் பெற்ற இருபதாயிரம் ரூபா பணத்தை மந்திரவாதி மோசடி செய்தமை குறித்தும் முறைப்பாடு செய்தார்.

இம் முறைப்பாட்டையடுத்து, பொலிசார் குறிப்பிட்ட மந்திரவாதியை இன்று கைது செய்து, விசாரணையின் பின்னர் மகியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்தபோதே நீதிபதியினால் மேற்கண்ட உத்தரவும் தண்டனையும் பிறப்பிக்கப்பட்டன.

LEAVE A REPLY

*