ரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்!

0
378
?????????????????????????????????????????????????????????

 

ஜெய்ப்பூர்: 100, 200 இல்லை.. மொத்தம் 6 ஆயிரம் ஃபாலோயர்கள் மனைவிக்கு பேஸ்புக்கில் இருந்திருக்கிறார்கள்.. இதையெல்லாம் பார்த்து ஆத்திரம் தாங்காமல் காதல் மனைவியை கொலையே செய்துவிட்டார் கணவன்.. இந்த சம்பவம் ராஜஸ்தானில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜஸ் முகமது கான் என்பவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.. இவரது மனைவி நைனா மங்ளானி.. ரேஷ்மா என்ற செல்ல பெயரும் உண்டு..

கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது… காதல் திருமணம்தான். வேலை விஷயமாக போன இடத்தில் நைனாவை கண்டதும் காதல் வந்துவிட்டது.

இரு வீட்டிலும் விஷயத்தை சொல்லவும், பெரியவர்களே பார்த்து கல்யாணம் செய்து வைத்தனர்.பிறகு புதுமணத்தம்பதிகள் தனியாக வீடு எடுத்து தனிகுடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.. ஆனால் நைனாவின் எப்பவுமே செல்போன்தான்..

நாள் முழுக்க ஃபேஸ்புக்கிலேயே விழுந்து கிடப்பார். எப்ப பார்த்தாலும் செல்போனில் மூகி கிடப்பதை முகமது கான் கண்டித்துள்ளார்.. இதனாலேயே 2 பேருக்கும் தகராறு வந்துள்ளது.

ஒருநாள் தேச்சையாக மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தார் முகமு கான்.. அப்போது அவருக்கு பயங்கர ஷாக்.. ஃபேஸ்புக்கில் மனைவியின் ஃபாலோயர்ஸ் 6 ஆயிரத்தை தாண்டி போயிருக்கிறது..

அவர்களுடன் நைனா சேட்டிங் செய்து, அரட்டை அடித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்படவும், நைனா கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.

கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெற்றோர் அறிவுறுத்தியபோது, “சந்தேக பிராணியுடன் என்னால வாழ முடியாது.. ஒரேடியா டைவர்ஸ்தான்” என்று சொல்லி உள்ளார்.

ஆனால் விரட்டி விரட்டி மனைவியை நேசித்த முகமது கானுக்கு, டைவர்ஸ் செய்ய இஷ்டமில்லை. அதனால் விவாகரத்து தர முடியாது என்று சொல்லிவிட்டார். கடந்த 19-ம் தேதி காலையில் கோபித்து கொண்டு போன

மனைவிக்கு போன் செய்து, நேரில் பேசி சரிசெய்து கொள்ளலாம் வா, என்று அழைத்துள்ளார்..

நைனாவும் அம்மா வீட்டில் இருந்து கிளம்பி வந்துள்ளார்.. மனைவியிடம் அன்பாக பேசி சமாதானம் செய்தார்.. உடனே அன்றைய நாள் முழுவதும் மனைவியை சுற்றி பார்க்க பல இடங்களுக்கு கூட்டிச்சென்றார்.

ஆனால் நைனா வேலையை காட்டினார்.. அடிக்கடி எடுத்து செல்போனை பார்த்து கொண்டும் சேட் செய்து கொண்டும் இருந்தார்.

sertzஅப்போதுதான் ஆத்திரம் அடங்காத முகமது கான், டெல்லி – ஜெய்ப்பூர் ஹைவேஸ்க்கு கூட்டி சென்று கொடூரமாக மனைவியை தாக்கினார்.. கழுத்தை நெரித்து கொன்றார்.. ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து மனைவியின் முகத்தில் அடித்து கொலை செய்தார்.

இதையடுத்து, மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள்தான் முகம் சிதைந்த நிலையில் ஒரு பெண் கொல்லப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்..

இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அசோக் குப்தா சொல்லும்போது, “நைனாவின் நடத்தை குறித்து அஜாஸ் சந்தேகப்பட்டுள்ளார்…

இதனால் நைனா அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். ஆனால் அஜாஸ் அதற்கு தயாராக இல்லை.. இந்த விஷயத்தில் இருவருக்கும் பயங்கர வாதங்களும் இருந்தன.. இதனால்தான் அஜாஸ் நைனாவை கொல்ல முடிவு செய்ததாகத் தெரிகிறது” என்றார்.

LEAVE A REPLY

*