மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம்! இளம் ஜோடியின் திருமணம் நிறுத்தப்பட்டது

0
394

திருமணத்துக்கு மணமகன் தயாராகி வந்தபோது, அம்மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் இரகசியமாக ஓடியதால், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு இளம் ஜோடியின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத்  கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர்  ராகேஷ் (வயது 48) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது),  புடவைத் தொழிலதிபர்.

இவரது மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த  வைர கைவினைஞர்  ஒருவரின் மகளுக்கும்  கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.  திருமணம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆவது வாரம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருவீட்டாரும் அடிக்கடி பேசி நெருக்கமாகி உள்ளனர். இதில் மணமகனின் தந்தை ராகேசும், மணமகளின் தாயார் சுவாதி (வயது 46). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர்கள் ஏற்கனவே  நண்பர்களக இருந்து உள்ளனர். இதனால் இன்னும் அன்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில்  கடந்த 10 ஆம் திகதி முதல் மணமகனின் தந்தை – மணமகளின் தாயும் அவர்களது வீட்டில் காணவில்லை.

இருவரும் இணைந்து எங்கோ தலைமறைவாகி விட்டார்கள். இதனால்  மணமகன் – மணமகள் இரு  குடும்பங்களுக்கும்  மிகவும் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து இரு குடும்பத்தினரும் பொலிஸாரிடம்  புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது திருமணம் நின்று போய் உள்ளது.மணகமனின் தந்தையும் மணமகளின் தாயும்  இளமைக்காலத்தில் அயலவர்களாக இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரு; தமது காதலை புதுப்பித்துக் கொண்டனர் எனக் கருதப்ப்படுகிறது.

இவர்கள் எனக திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்து உள்ளனர்.

பின்னர் மேற்படி பெண் அவரின் வைர கைவினைஞரை திருமணம் செய்திருந்தார் என உறவின் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*