விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
51

யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 22 வயதுடைய ரவீந்திரன் தனுசன் எனத் தெரியவருகின்றது.

வடமராட்சி – அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்துள்ளார்.

82622162_1119817865048317_517156423700840448_nமாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரரான இவர், சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என்பதுடன், இவரின் இழப்பு அப்பகுதி மக்களையும் விளையாட்டுக் கழகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

*