8.5 C
Zurich, CH

இறுமாப்பும் தமிழர் தரப்பும்…

0
159

தை பிறந்தால் வழி பிறக்கும் என்­பது வாழை­யடிவாழை­யாகத் தொடர்ந்து வரு­கின்ற ஒரு நம்­பிக்கை. தை பிறந்­ததும் நன்­மை­களை விளை­விக்கத்தக்க வழி பிறக்­கின்­றதோ இல்­லையோ அது முக்­கி­ய­மல்ல.

அந்த நம்­பிக்­கையை ஆதா­ர­மாகக் கொண்டு புதிய வரு­டத்தில் திட­மாகக் காலடி எடுத்து வைப்­பதே இந்த வழ­மையின் அடிப்­படை நோக்கம்.

அந்த நோக்­கத்­தி­லேயே 2020ஆம் ஆண்டின் தைப்­பி­றப்­புடன் தமிழ் மக்­களும் தங்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்­வ­தற்­கு­ரிய வழி பிறக்கும் என்ற ஆவல் மிகுந்த நம்­பிக்­கை­யோடு தை மாதத்தில் – புதிய வரு­டத்தில் காலடி எடுத்து வைத்­துள்­ளார்கள்.

ஆனால் அந்த நம்­பிக்­கையை நிறை­வேற்­றத்­தக்க அல்­லது அந்த நம்­பிக்­கைகள் நிறை­வே­று­வ­தற்­கான அறி­கு­றி­களைத்தான் காண முடி­ய­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்கம் 2015ஆம் ஆண்டு உரு­வா­கி­யது. அப்­போது அர­சியல் ரீதி­யாகத் தமிழ்மக்கள் மிகுந்த நம்­பிக்­கை கொண்­டி­ருந்­தார்கள்.

ஆனால் 2019ஆம் ஆண்டின் இறு­தியில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு முடிவு கட்­டி­யது.

அந்த ஆட்சி மாற்றம் சிறு­பான்மை இன மக்­களை இன ரீதி­யாக ஒடுக்கி, ஒதுக்கி வைப்­ப­தற்­கான வழி ­மு­றை­க­ளையே அடை­யா­ளப்­ப­டுத்தி இருக்­கின்­றது.

 

புதிய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­பக்ஷ சிறு­பான்மை இன ஒதுக்­கு­நிலை அர­சியல் போக்­கி­லேயே அதிக கவனம் செலுத்­தி­யுள்ளார்.

பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள பௌத்த மக்­களே தன்னை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­துள்­ள­தா­கவும், அவர்கள் புதிய அர­சியல் கலா­சா­ரத்­துக்­கான ஆணையை வழங்கி உள்­ள­தா­கவும், அந்த மக்­களின் ஆணையை சிரமேற் கொண்டு, அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வதே தனது அர­சியல் நோக்கம் என்­ப­தா­கவும் அவர் தனது கொள்கைப் பிர­க­டன உரையில் தெரி­வித்­திருந்தார்.

பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்­க­ளினால் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும், இந்த நாட்டின் அரச தலைவர் என்ற வகையில் சிறு­பான்மை இன மக்­களின் ஜனா­தி­ப­தி­யா­கவும் செயற்­ப­டுவேன் என்றும் அவர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஆனால் அந்த உறு­தி­மொழி வெறு­மனே ஓர் அர­சியல் கருத்­தாக, அர­சி­ய­லுக்­காக ஆற்­றப்­பட்ட அர­சியல் உரையின் ஓர் அம்­ச­மா­கவே வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஏனெனில் சிறு­பான்மை இன மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னைகள் மற்றும் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட பிரச்­சி­னை­களில் அவர் தனது கவ­னத்தை இதுவரை  செலுத்­தவே இல்லை.

தமிழ்த்­த­ரப்பின் எதிர்­பார்ப்பு அர்த்­த­மற்­றதா…..?

சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என உறு­தி­ய­ளித்து, அந்த மக்­களின் பேரா­த­ர­வுடன் ஆட்­சிக்கு வந்த ரணில், மைத்­திரி கூட்டு அர­சாங்­க­மா­கிய நல்­லாட்சி அர­சாங்கம் அந்த உறு­தி­மொ­ழியை நிறை­வேற்­ற­வில்லை.

எதேச்­ச­தி­காரப் போக்கில் சென்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்­கத்தின் போக்­கி­லேயே சிறு­பான்மை இன மக்­களின் விவ­கா­ரங்­களை நல்­லாட்சி அர­சாங்­கமும் கையாண்­டி­ருந்­தது.

இதனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தை நம்பி அதனைத் தெரிவு செய்த சிறு­பான்மை இன மக்கள் கையைச் சுட்டுக் கொண்­டதோர் அர­சியல் நிலைக்கே தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

யுத்­தத்தில் வெற்றி பெற்ற பின்­ன­ரும்­கூட சிறு­பான்மை இன மக்­களின் நலன்­களில் அக்­கறை செலுத்­தாத போக்கைக் கடைப்­பி­டித்­தி­ருந்த ராஜ­பக்ஷ அணி­யி­னரை 2019 தேர்­தலில் ஏற்று ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தற்­கான அர­சியல் மன நிலை­மைைய சிறு­பான்மை இன மக்கள் கொண்­டி­ருக்­க­வில்லை.

sajith-premadasa_850x460_acf_cropped_850x460_acf_cropped-1-735x400ரணில், – மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அணி­யினால் தோற்­க­டிக்­கப்­பட்ட ராஜ­பக்ஷ அணி­யினர் மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்­று­விடக் கூடாது என்­பதில் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் இருந்து ஐக்­கிய தேசியக் கட்சியின் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

ஆனால் யார் ஆட்­சிக்கு வரக்­கூ­டாது என சிறு­பான்மை இன மக்கள் விரும்பி இருந்­தார்­களோ அந்த அணி­யி­னரே தேர்­தலில் வெற்றி பெற்­றனர்.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யானார். தேர்­தலில் அவர் வெற்றி பெற்­று­விடக் கூடாது என்ற சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் மன­நி­லையை அவரும், அவரைச் சேர்ந்­தோ­ரையும் உள்­ள­டக்­கிய ராஜ­பக்ஷ அணி­யினர் தெளி­வாக அறிந்­தி­ருந்­தனர்.

ஆனாலும் தேர்­தலில் தனக்கு எதி­ராக வாக்­க­ளித்த சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­களைக் கவ­னிப்­ப­தற்கோ அல்­லது அவற்றைத் தீர்ப்­ப­தற்கோ உரிய ஆணையை எவரும் தனக்கு தேர்­தலில் வழங்­க­வில்லை என்ற தெளி­வான சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­லேயே அவ­ரு­டைய அர­சியல் நகர்­வுகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

பெரும்­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­று­வதே தலை­யாய கடமை. அந்த எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அமை­வா­கவே சிறு­பான்மை இன மக்­களின் விட­யங்கள் மற்றும் பிரச்­சி­னைகள் அணு­கப்­படும் என்­பதை அவர் வெளிப் ­ப­டை­யா­கவே தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் இந்த நிலைப்­பாட்டை பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ மிகவும் தெளி­வாக உறு­திப்­ப­டுத்தி உள்ளார்.

இந்­தி­யா வின் உத­வி­யோடு சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யாது. அவ்­வாறு எதிர்­பார்ப்­பதில் அர்த்­த­மில்லை.

தீர்வு எம்­மிடம் இருந்தே வர வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் கூறி­யுள்ளார்.

ஆயுத மோத­லற்ற நிலை­யிலும் உண்­மை­யான அமைதி கிட்­ட­வில்லை

இதன் மூலம் அர­சுக்கு வெளித் தரப்பில் இருந்து அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து, அதன் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சிக்கக் கூடாது.

அவ்­வா­றான முயற்­சிகள் கைகூ­ட­மாட்­டாது என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார் என்று கரு­து­வ­தற்கு இட­முண்டு.

சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அர­சியல் பிரச்­சி­னைகள் என்று எதுவும் கிடை­யாது. பொரு­ளா­தார பிரச்­சி­னை­களே இருக்­கின்­றன.

எனவே, அபி­வி­ருத்­தியின் ஊடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அர­சாங்­கத்தின் கொள்கை வழி­ யி­லேயே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும்.

இத்­த­கைய கொள்கை நிலைப்­பாட்­டிற்கு வெளி­யி­லான நட­வ­டிக்­கை­களின் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண முடி­யாது என்­பதை அவர் தமிழ்த்­த­ரப்­புக்கு எடுத்­து­ரைத்­துள்ளார் என்றே தெரிகின்றது.

அர­சாங்­கத்­துக்கு எதி­ரான தலைப்­புக்­களே செய்­தி­க­ளாகத் தமிழ்ப் பத்­தி­ரி­கை­களில் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன.

அர­சுக்கும் தமிழ் மக்­க­ளுக்­கு­மி­டையில் இடை­ வெ­ளியை ஏற்­ப­டுத்தும் வகையில் இந்தச் செய்­திகள் அமை­கின்­றன. மக்­க­ளையும் அர­சாங்­கத்­தையும் இணைக்கும் வகையில் ஊட­கங்கள் செயற்­பட வேண்டும் என்றும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ இந்தச் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார்.

தேர்தல் காலத் தில் இருந்தே பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் குறிப்­பாக ராஜ­பக்ஷக்க­ளுக்கும் பெரும்­பான்­மை­யான வடக்கு– கிழக்குப் பிர­தேச தமிழ்மக்­க­ளுக்­கு­ மி­டை­யி­லான அர­சியல் ரீதி­யான உறவில் விரிசல் ஏற்­பட்­டி­ருந்­தது.

தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ வெற்றி பெற்­றதன் பின்னர் இந்த விரிசல் மேலும் அதி­க­மா­கின்ற போக்கே காணப்­ப­டு­கின்­றது.

இந்த விரி­சலை மென்மேலும் அதி­க­ரிக்­கத்­தக்க வகை­யி­லேயே தமிழ்ப் பத்­தி­ரி­கைகள் செய்­தி­களைக் கையாள்­கின்­றன என்ற ரீதி­யி­லான தனது கருத்தைப் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான இந்தச் சந்­திப்­பின்­போது வெளி­யிட்­டுள்ளார்.

கொள்கை ரீதி­யாக தமிழ்மக்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­க­ளுக்கும் அர­சுக் கும் இடையில் காணப்­ப­டு­கின்ற இடை­வெ­ளியைத் தமிழ்ப் பத்­தி­ரி­கை­களின் ஊடாக அதி­க­ரிக்­க­வி­டாமல் பார்த்துக் கொள்­கின்­றதோர் அர­சியல் நிலைப்­பாட்­டி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார் என்றும் கருத முடியும்.

_104878303_gettyimages-1073360772மஹிந்த ராஜ­பக்ஷ அணி­யினர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்த காலந்­தொட்டே, தமிழ் மக்­க­ளு­ட­னான தமது அர­சியல் உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில்  ரா­ணுவ ஆதிக்­கத்தை நிலை­நிறுத்தும் அத ஊடாக தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை, போரினால்

பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களின் மீள்­கட்­ட­மைப்பு மற்றும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களனூடான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனாலும், பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளு­டைய நாளாந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கும், இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருந்­தனர்.

ஆயினும் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றத்­தக்க வேலைத்­திட்­டங்­களை அப்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை.

குறிப்­பாக மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நியா­யமும் நீதியும் கிடைக்க வேண்டும். மீள்­கு­டி­யேற்­றத்தில் சுதந்­தி­ர­மான வாழ்­வா­தார முயற்­சி­களின் ஊடான வாழ்க்கை நிலை­மைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருந்­தனர்.

ஆனால் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்கு மாறான வகை­யி­லேயே அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருந்­தன.

இறுக்­க­மான நிலைமை
மக்­க­ளு­டைய விருப்­பத்துக்கும், அவர்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­மான அர­சியல் நட­வ­டிக்­கைகள், மற்றும் புனர்­வாழ்­வுக்­கான மறு­சீ­ர­மைப்பு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இதனால் யுத்தம் முடி­வ­டைந்து யுத்தச் சூழலின் நெருக்­கடி நிலை­மைகள் இல்­லா­தொ­ழிந்­தி­ருந்த போதிலும், அத்­த­கைய நிலை­மையை உரு­வாக்­கிய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை அர­சியல் ரீதி­யா­கவோ சமூக, பொரு­ளா­தார ரீதி­யா­க­வோ­கூட தமிழ்மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

இத்­த­கை­யதோர் அர­சியல் உள­வியல் நிலை­மை­யி­லேயே யுத்தம் முடி­வ­டைந்த ஆறு வரு­டங்­களின் பின்னர் 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தல்­களில் ஓர் ஆட்சி மாற்­றத்­துக்­காக தமிழ்மக்கள்  ரா­ணுவ ரீதி­யி­லான நெருக்­கு­வா­ரங்­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சாங்­கத்தை எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

அந்த ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மீண்டும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­ வ­தற்கு முற்­பட்ட ராஜ­பக்ஷக்­களின் அர­சியல் கொள்­கை­களும் செயற்­பா­டு­களும் சிறு­பான்மை இன மக்­களின் மனங்­களை வென்­றெ­டுக்­கத்­தக்க வகையில் அமை­ய­ வில்லை. மாறாக பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கும் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளுக்கும் இடையில் அர­சியல் ரீதி­யான இடை­வெ­ளியை வலு­வாக்­கு­கின்ற பிர­சார நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இத்­த­கைய பின்­பு­லத்­தி­லேயே சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யான மக்­களின் ஆத­ரவில் ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

ஆனால் தேர்­தலின் பின்­ன­ரும்­கூட யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனங்­களை அர­சியல் ரீதி­யாக வெல்­லத்­தக்க நிலைப்­பாட்டை அரசு கொண்­டி­ருக்­க­வில்லை.

மாறாக பெரும்­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­பு­களின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்ற கடும் நிலைப்­பாடு இந்த 2020 புதிய ஆண்டுப் பிறப்­புடன் இறுக்­க­மாக வெளி­யாகி இருக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் ஆளும் கட்­சி­யா­கிய பொது­ஜன பெர­முன எந்த வகை­யி­லா­வது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்தை நாடா­ளு­மன்­றத்தில் பெற்­று­விட வேண்டும் என்ற இலக்கை நோக்­கிய நட­வ­டிக்­கை­க­ளையே அரச தரப்பில் காண முடி­கின்­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையில், ஜனா­தி­ப­தியைப் போலவே நாடா­ளு­மன்­றத்­துக்கும் பாரிய ஆட்சிப் பொறுப்பு உள்­ளது.

குறிப்­பாக 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் பல­வற்றை வெட்டிக் குறைத்து, நாடா­ளு­மன்­றத்தின் அதி­கார பலத்தை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. அந்த வகையில் பிர­தமர் வலு­வான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராகத் திகழ்­கின்றார்.

ஆத­ர­வற்ற நிலை
ஆனாலும் 2019 ஜனா­தி­பதித் தேர்­தலில் அமோ­க­மாக வெற்றி பெற்­றுள்ள ஜனா­தி­பதி நாடா­ளு­மன்­றத்தை முடக்கி தனி­ம­னித அதி­கா­ரத்தை மேலாண்மை நிலையில் முன்­னெ­டுக்­கின்ற போக்­கி­லான நட­வ­டி­க­்கை­க­ளையே முன்­னெ­டுத்­துள்ளார்.

பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆளா­கிய பல படை அதி­கா­ரி­க­ளுக்கு தண்­டனை விலக்­கீட்டு உரிமை கிடைக்கச் செய்­துள்­ள­துடன், சட்ட நட­வ­டிக்­கை­களில் இருந்து அவர்கள் விலக்கு பெறு­வ­தற்­கான வழி­மு­றை­களும் கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தப் போக்­குகள் அரசு மீது தமிழ் மக்கள் நம்­பிக்கை கொள்­வ­தற்­கு­ரிய சாத­க­மான நிலை­மை­களை உரு­வாக்­க­வில்லை.

இறுக்­க­மான போக்கைக் கொண்­டுள்ள அர­சாங்­கத்­திடம் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைப்­பது என்­பது குதிரைக் கொம்­பா­கவே இருக்கும் என்ற நிலை­மைக்கே தமிழ் மக்கள் படிப்­ப­டி­யாகத் தள்­ளப்­பட்டு வரு­கின்­றார்கள்.

மறு­பக்­கத்தில் தமிழ் அர­சியல் தலை­மைகள் மீதும் ­மக்கள் நம்­பிக்கை வைக்­கத்­தக்க நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை.

மோச­மான மனித உரிமை மீறல் நிலை­மை­க­ளி­லான ஆட்­சியில் இருந்து விடு­பட்­டி­ருந்த தமிழ் மக்கள் மீண்டும் அந்த இருட்டு யுகத்­திற்குள் பிர­வே­சித்­துள்ள வகை­யி­லான அர­சியல் நிலை­மையே நில­வு­கின்­றது.

இந்த நிலை­மையில் இருந்து தங்­களை வெளிச்சம் மிகுந்­ததோர் அர­சியல் நிலை­மைக்குள் வழி­காட்டி அழைத்துச் செல்­லத்­தக்க அர­சியல் தலை­மையை அவர்­களால் காண முடி­ய­வில்லை.

ரணில், – மைத்­திரி கூட்டு அர­சாங்க காலத்தில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும். அதற்­கான பெரும் முயற்­சி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அந்த முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும். அதனைக் குழப்­பி­விடக் கூடாது என்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் அறி­வு­ரையை மக்கள் பின்­பற்­றி­யி­ருந்­தனர்.

அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் நம்­பிக்­கையின் வழியில் தீபா­வ­ளிக்குத் தீர்வு கிடைக்கும், பொங்­க­லுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அரச தரப்­புக்கு வக்­கா­ளத்து வாங்­கிய நம்­பிக்­கை­களை கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களும் தமிழ் மக்­களும் நம்­பி­யி­ருந்­தனர்.

ஆனால் அந்த நம்­பிக்கை அவர்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுக்­கான வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­க­வில்லை. மாறாக நல்­லாட்சி அர­சாங்­கமே கவிழ்ந்து போனது. இதனால் தேசிய ரீதியில் ஆத­ர­வற்­றதோர் அர­சியல் நிலை­மைக்கே தமிழ் மக்கள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

tna_tamசறுக்கிச் செல்லும் முயற்­சிகள்
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களும் தீர்க்­க­த­ரி­சனம் மிக்க வழி­காட்­டலைக் கொண்­ட­தாகக் காணப்­ப­ட­வில்லை.

கூட்­ட­மைப்பை வலு­வா­னதோர் அர­சியல் அமைப்­பாகக் கட்­டி­ய­மைத்து, அதன் ஊடாக தமிழ் மக்­களை நிறு­வன ரீதி­யான அர­சியல் இறுக்­கத்­துக்குள் வைத்­தி­ருப்­ப­தற்குக் கூட்­டமைப்பினால் முடி­யாமல் போயுள்­ளது.

விடு­த­லைப்­பு­லி­களின் மறை­வுக்குப் பின்னர் தமிழ் மக்­களின் அர­சியல் தலைமைப் பொறுப்பை ஏற்­றி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குள் உட்­கட்சி ஜன­நா­யக முறைகள் பின்­பற்­றப்­ப­டாத கார­ணத்­தினால் அது சிதை­வ­டைய நேரிட்­டது.

பல கட்­சிகள் ஒன்­றி­ணைந்­தி­ருந்த கூட்­ட­மைப்பு இப்­போது மூன்று கட்­சி­களை மாத்­தி­ரமே கொண்­ட­தாக மாற்றம் பெற்­றுள்­ளது.

மக்கள் மத்­தியில் அது தனது செல்­வாக்கை வளர்த்துச் செல்­வ­திலும் பார்க்க மக்­களின் அர­சியல் ரீதி­யான நம்­பிக்­கை­களை சிதை­வ­டை­யவே செய்­துள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் நில­விய தேசிய மட்­டத்தில் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு செவி­சாய்க்­கின்ற சாத­க­மான நிலைமை இப்­போது அற்றுப் போயுள்­ளது.

இதனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மீது எந்த வகையில் நம்­பிக்கை வைப்­பது எவ்­வாறு அதனைப் பின்­பற்­று­வது என்று ஆழ­மாகச் சிந்­திக்க வேண்­டிய ஒரு நிலை­மைக்குத் தமிழ் மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.

வர­வுள்ள பொதுத் தேர்­தலில் அமோ­க­மாக வெற்றி பெற வேண்டும் கூடிய எண்­ணிக்­கை­யி­லான பிர­தி­நி­தி­களை நாடா­ளு­மன்­றத்­துக்குத் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஆனால் நொந்து நசிந்து போயுள்ள தமிழ் அர­சி­யலைத் தலை நிமிர்த்தி வீச்­சுடன் வழி­ந­டத்திச் செல்­வ­தற்­கான வல்­லமையைக் கொண்­டதோர் அர­சியல் தலை­மையை

தமிழ் மக்­களால் காண முடி­ய­வில்லை.
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் செயற்­பா­டுகள் தமிழ்த்­த­ரப்பின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத்­தக்­க­தாகச் செயற்­ப­ட­வில்லை.

அர­சாங்­கத்­து­டனோ அல்­லது சர்­வ­தேச தரப்­பு­டனோ வலு­வான நிலையில் இருந்து பேச்­சுக்கள் நடத்­தவோ அல்­லது அந்தத் தரப்­புக்­க­ளுடன் ஆளு­மை­யுடன் பிரச்­சி­னை­களை முன்­னெ­டுத்துச் செல்­லவோ முடி­யாத நிலை­மை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு காணப்­ப­டு­கின்­றது.

இந்த பல­வீ­ன­மான நிலை­மையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்குப் பதி­லாக ஒரு மாற்றுத் தலை­மையை உரு­வாக்க வேண்டும் என்று கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்­சி­களும், அர­சியல் தரப்­புக்­களும் முனைப்பு கொண்­டி­ருந்த போதிலும் அந்த முயற்­சியும் பல­ன­ளிக்­கத்­தக்­க­தாக அமை­ய­வில்லை.

மாற்றுத் தலை­மைக்­கான முயற்­சிகள் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு வரு­டங்கள் கழிந்­து­விட்­டன. ஆனால் மாற்றுத் தலை­மைக்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்த அர­சியல் தரப்­புக்கள் அல்­லது அர­சியல் சக்­தி­க­ளினால் முன்­னேற்­றத்தைக் காண முடி­ய­வில்லை. சாண் ஏற முழம் சறுக்­கிய நிலை­யி­லேயே அந்த முயற்­சிகள் சறுக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

எந்த அடிப்­ப­டையில் நம்­பிக்கை கொள்­வது?

அர­சியல் தலை­மைத்­து­வத்தின் அடை­யா­ள­மாகத் திகழ்ந்த முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­சரின் தலை­மையில் மாற்றுத் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொண்ட முயற்­சி­களும் தமிழ்த்­த­ரப்­புக்­கு­ரிய வலி­மை­யான அர­சியல் தலை­மை­யாக அல்­லாமல் தேர்தல் கூட்­டுக்­கா­ன­தொரு மாற்றுத் தலை­மை­யா­கவே சுருங்கிப் போயுள்­ளது.

வரப்­போ­கின்ற தேர்­த­லுக்கு ஓர் அணியாக இறுக்கமான கட்டமைப்பின் கீழ் முகம் கொடுப்பதற்குரிய செயற்பாடுகளும்கூட இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி என்ற இரண்டு கட்சிகளுடன் ஏனைய புதிய கட்சிகளும் அரசியலில் நாட்டம் கொண்டுள்ள பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது

மாற்றுத் தலைமை யாருடைய தலைமையின் கீழ் செயற்படவுள்ளது அல்லது யாருடைய தலைமையின் கீழ் செயற்படப் போகின்றது என்பது குறித்த தீர்க்கமான முடிவுகளும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

தேர்­த­லுக்­கான காலம் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எந்தப் பெயரின் கீழ் எந்தச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது என்­பதைத் தீர்­மா­னிப்­பதில் இன்­னுமே இணக்கம் காணப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

அந்தப் பெயரை தேர்தல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­வ­தற்­கான முயற்­சிகள் இன்னும் முழு­மை­யாக நிறை­வே­றாத நிலை­மை­யி­லேயே தொங்கி நிற்­ப­தா­கவே தெரி­கின்­றது.

மாற்­றுத்­த­லைமை உரு­வாக்கம் என்­பது இப்­போ­தைய அர­சியல் சூழலில் மிக மிகக் கடி­ன­மான காரியம். அந்தக் காரி­யத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் செய்து முடிக்க முடி­யாது. அந்த முயற்­சியின் முன்­னேற்றம் குறித்த தக­வல்­க­ளையும் உள் நிலை­மை­க­ளையும் வெளிப்­ப­டுத்த முடி­யாது. அதற்­கான அவ­சியம் கிடை­யாது என்று வாதி­டலாம்.

ஆனால் மக்கள் இன்று நம்­பிக்கை இழந்­த­வர்­க­ளாக, ஆளுமை மிக்க அர­சியல் தலை­மைக்­காக ஏங்­கு­ப­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

இந்த நிலையில் அவர்கள் நம்­பிக்கை வைக்­கத்­தக்க தரப்­புக்கள் வெளிப்­பட வேண்­டி­யது அவ­சியம். இந்தச் சந்­தர்ப்­பத்தை மாற்றுத் தலை­மையை உரு­வாக்­கு­கின்ற சக்­திகள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம். ஆனால் மாற்­றுத்­த­லை­மையை உரு­வாக்­கு­வதில் காணப்­ப­டு­கின்ற இழு­ப­றி­களும் பிடுங்­கு­பா­டு­க­ளுமே வெளிச்­சத்­திற்கு வந்த வண்ணம் இருக்­கின்­றன.

இத்­த­கைய நிலை­மையில் தை பிறந்­துள்­ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை எந்த அடிப்படையில் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும் என்று தெரியவில்லை.


பி.மாணிக்­க­வா­சகம்

LEAVE A REPLY

*