திருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்

0
121

75 வயது நடிகர் ஒருவர் திருமணமான மறுநாளே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

202001181329064113_1_sd21._L_styvpfமனைவியுடன் திபாங்கர் டே

வங்காள மொழியின் பிரபல நடிகர்களில் ஒருவர் திபாங்கர் டே. இவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன்பின் அவர் நடிகை டோலான் ராய் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் நீண்டகாலம் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இதை அடுத்து இருவரும் கடந்த 16-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக அந்த திருமண விழா நடந்து முடிந்தது.

இந்த திருமணம் மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் முடிந்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

*